|
என
என்று அருளிச்செய்வர்” என்றாற்போலே பகைவன் சோறு
உண்டு வளர்ந்தவன் மனோரதம் பெற்றானே அன்றோ; அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே
மிகவும் துக்கித்தவராய், 1இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து,
பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறாவிட்டால் அலமந்து நோவு படுமாறு
போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு, 2இன்னம் எத்தனைத் திருவாசல்
தட்டித் திரியக்கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக்கட்டுகிறார்.
520
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
பொ-ரை :-
எம்மானே! தெவிட்டாத அமுதே! அடியேனுடைய சரீரமானது, உன் விஷயத்தில் அன்புதானே
தனக்கு உருவமாகிப் பின்பு தண்ணீராகி ஒரு நிலையில் நில்லாமல் கரையும்படி உருக்குகின்ற நெடுமாலே!
சிறப்புப் பொருந்திய செந்நெற்பயிர்கள் சாமரையைப் போன்று வீசுகின்ற செழுமை பொருந்திய
நீரையுடைய திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அழகு பொருந்திய ஒப்பனையானது விளங்கும்படியாகச்
சயனித்திருக்கின்றவனே! என் கண்களாலே கண்டு அநுபவிக்கப் பெற்றேன் என்கிறார்.
வி-கு :- உடலமானது அன்பாகி நீராகி
அலைந்து கரையும்படியாக உருக்குகின்ற நெடுமாலே என்க. வீசும் திருக்குடந்தை என்க.
இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்.
ஈடு :- முதற்பாட்டு. 3உன்
அழகாலே என்னை உருக்குகின்ற நீ கண்வளர்ந்தருளக் கண்டேன்; குளிர
___________________________________________________
1. “ஆராவமுதே”, “ஏரார்கோலம்” என்பனவற்றைக்
கடாக்ஷித்து
‘இனிமையாலும்’ என்றும், “செந்தாமரைக்கண்ணா” என்றதனைக்
கடாக்ஷித்து ‘அழகு முதலாயினவற்றாலும்’
என்றும் அருளிச்செய்கிறார்.
2. “உனக்காட்பட்டும் இன்னம் உழல்வேனோ”
என்றதனைக் கடாக்ஷித்து
‘இன்னம் எத்தனைத் திருவாசல் தட்டித் திரியக்கடவேன்’ என்கிறார்.
3.
“உருக்குகின்ற நெடுமாலே” என்றதனைக் கடாக்ஷித்து ‘உன் அழகாலே’
என்று தொடங்கியும், “கிடந்தாய்
கண்டேன்’
|