|
New Page 1
நோக்குதல், அணைத்தருளுதல்,
செய்யக் காண்கின்றிலேன் என்கிறார்.
1ஆரா
அமுதே-அநுபவியாநின்றாலும் கிரமப்பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறி
இருக்கும்படி. என்றது, முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே
அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன; அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி
இருக்கையைத் தெரிவித்தபடி. ஆரா அமுதே - 2கடலில் உப்புச்சாறு
குடிப்பார்க்குத் தேவயோனியிலே பிறக்கவேணும், பிரஹ்மசரியம் அநுஷ்டிக்க வேணும், இத்தனையும்
இருந்தால் ஒரு தடவை உண்ணக்கூடியதாக இருக்கும்; இது அங்ஙன் அன்றிக்கே, சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும்
உண்ணக்கூடியதாய், பிரஹ்மசரியம் முதலானவற்றினின்றும் நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே
போக்கக் கூடியதாயிருக்கும். 3வடதேசத்திலே லோகசாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க,
இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல, ‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க,
‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக்
கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன, ‘அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச்
சொல்லிக் காணாய்’ என்ன,
____________________________________________________
என்றதனைக் கடாக்ஷித்துக் ‘கண்
வளர்ந்தருளக் கண்டேன்’ என்றும்
அருளிச்செய்கிறார். அதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
‘குளிர
நோக்குதல்’ என்று தொடங்கி.
1. “ஆரா அமுதே” என்றது,
உண்ண உண்ணத் தெவிட்டாத திருப்தி பிறவாத
அமுதம் என்றபடி. இதனையே விவரணம் செய்கிறார்
‘அநுபவியா
நின்றாலும்’ என்று தொடங்கி, ‘கிரமப்பிராப்தி’ இன்னது என்றும், ‘அது
பற்றாத’ என்றதனையும்
காட்டுகிறார். ‘முற்பட’ என்று தொடங்கி.
2. இன்னார்க்கு ஆரா அமுது
என்னுதல், இன்னபோது ஆரா அமுது
என்னுதல் செய்யாமல், பொதுவாக “ஆராவமுது” என்கையாலே ‘அதிகாரி
நியமம் இல்லை’ என்று வேறுபடுத்திக் காட்டுகின்றார் ‘கடலில்’ என்று
தொடங்கி. உப்புச்சாறு -
திருப்பாற்கடலில் தோன்றிய அமுதம்.
3.
“ஆராவமுது” என்ற இத்திருப்பெயர் போக்கியம் என்பதற்கு ஐதிஹ்யம்
காட்டுகிறார் ‘வடதேசத்திலே’
என்று தொடங்கி.
|