|
New Page 1
‘“ஆராவமுதே’”
என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன,
‘நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண
மிக்க ஆவலுடையவராய், ‘இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப்
போந்தார்.
ஆராஅமுதே -
1“ஸஹபத்நியா - பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு
கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக்
கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக்
கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா - பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள்
பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு
முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் - நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி
இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ?
எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச்
சொல்லியவாறாம். ஆரா அமுதே - இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம்
வித்து இச்சொல்லே ஆயிற்று.
____________________________________________________
1. இத்திருப்பெயரின் இனிமையின்
மிகுதி ஈச்வரனுக்கும் தனியே
அநுபவிக்கப் போகாது என்று, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘ஸஹபத்நியா’ என்று தொடங்கி.
“கதே புரோஹிதே ராம: ஸ்நாத:
நியத்மானஸ:
ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா
நாராயணம் உபாகமத்”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.
2. “ஸஹபத்நியா” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘ஆழங்காலிலே’
என்று தொடங்கி. “கொம்பு போற் சீதை” (திருவாய்.
4. 2 : 8.)
என்றதனைத் திருவுள்ளம்பற்றிக் ‘கொம்பு’ என்கிறார். அதனை விவரணம்
செய்கிறார்
‘கிண்ணகத்தில்’ என்று தொடங்கி. கிண்ணகம்-
ஆற்றுப்பெருக்கு.
3. நியதியாவது
- ஐம்பொறிகளையும் அடக்கிய தன்மை.
|