|
ந
நீர் தன்பக்கலிலே அகப்பட்டதனைக்
கரைத்துத் தான் கரையாதிருக்குமாயிற்று; இங்கு அங்ஙன் அன்று, நீர்தானாயிற்றுக் கரைகிறது என்பார்
‘நீராய் அலைந்து கரைய’ என்கிறார். 1அன்பு நீரானால், நீர்தான் கரையத்
தட்டு இல்லையே. இத்தனை அளவு இது ஆனால், அத்தலை செய்கிறது என்? என்னில், ‘உருக்குகின்ற’
என்கிறார்; என்றது, 2அழிக்கைக்கு அடி இட்ட இத்தனையாயிற்று என்கிறார் என்றபடி.
3அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே
காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி. 4தேசமான அணிகலனும் இவர் கைகூப்புச் செய்கையே
அன்றோ.
ஆழ்வார்க்கு உள்ள
உடலை உருக்கி அழிக்குமித்தனையேயோ? இவன் தனக்கு ஓர் அழிவில்லையோ? எனின், ‘நெடுமாலே’
என்கிறார். என்றது, எதிர்த்தலையில் அழிவுகண்ட பின்பே அன்றோ இத்தலையில் அழிவு என்றபடி.
5அவனுடைய வியாமோகத்தைப் பார்த்தால் இது ஒன்றும் போராதபடியாயிருக்கும்.
அவனுடைய அழிவு சொல்லும்போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.
‘நெடுமால்’ என்னில்
_____________________________________________________
1. நீர் கரையக்
கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அன்பு
நீரானால்’ என்று தொடங்கி.
2. “உருக்குகின்ற” என்ற நிகழ்காலத்துக்கு,
பாவம் அருளிச்செய்கிறார்
‘அழிக்கைக்கு’ என்று தொடங்கி.
3. சிலாக்கியமான இவர் திருமேனியை,
ஆபரணம் போலே உருக்கலாமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அழிக்கிறவன்’ என்று
தொடங்கி.
அழிக்கிறவன் - தட்டான்.
4. இவர் திருமேனி ஆபரணம்
ஆமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தேசமான’ என்று தொடங்கி.
பூசுஞ் சாந்தென் னெஞ்சமே
புனையும் கண்ணி எனதுடைய
வாச கஞ்செய் மாலையே
வான்பட் டாடையு மஃதே
தேச மான அணிகலனும் என்கை
கூப்புச் செய்கையே
ஈசன் ஞால முண்டு மிழ்ந்த
எந்தை ஏக மூர்த்திக்கே.
என்பது, திருவாய். 4. 3 : 2.
5. “நெடு” என்ற சொல்லுக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘அவனுடைய’
என்று தொடங்கி. ஆயின், “நீராய்
அலைந்து கரைய” என்பது போன்று,
சொல்லாது ஒழிந்தது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவனுடைய அழிவு சொல்லும்போது’ என்று தொடங்கி.
|