| என 
என்றது, அறுத்து நடவேண்டா 
போலே காணும் இருப்பது என்றபடி. 1கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே. அன்றிக்கே,
2சேஷ வஸ்துக்களின் தொழில்கள் முழுதினையும் சேஷி தனக்கு அடிமையாக நினைத்திருக்கிறபடியால்
‘கவரி வீசும்’ என்கிறார் என்னுதல். செழு நீர்த் திருக்குடந்தை - திருக்கண் வளர்ந்தருளுகிற 
சௌகுமார்யத்துக்குப் போரும்படி அழகிதான தண்ணீர் நிறைந்திருக்கின்ற திருக்குடந்தையிலே. செழுநீர் 
- பெருநீர் என்றுமாம். ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் - அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி 
திருக்கண் வளர்ந்தருளுகின்றாய்.
 3நாட்டார் 
உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்றுபோல இருக்கும், ஓர் 
இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி 
இருப்பர்; இங்கு அங்ஙன் அன்றிக்கே, 4பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான 
அந்தப் பெருமாள் என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே, கிடந்த கிடைக்கு 
ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார். ‘இவன் 
உணரில் செய்வது என்’ என்று
 
____________________________________________________ 
1. அசேதனமான செந்நெல், 
கவரி வீசக் கூடுமோ? என்ன, அதற்கு விடைஅருளிச்செய்கிறார் ‘கருத்து அறிந்து’ என்று தொடங்கி. 
என்றது, அஹ்ருத
 ஸஹஜ தாஸ்யரான நித்தியசூரிகளுடைய அவதாரமாகையாலே கூடும்
 என்றபடி. அஹ்ருத - 
அபகரிக்கப்படாத.
 
 2. இவை அசேதனங்களானாலும், 
சேஷி நினைவாலே அடிமையாகக் கூடும்
 என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘சேஷ வஸ்துக்களின்’
 என்று தொடங்கி.
 
 3. “கிடந்தாய் கண்டேன்” 
என்கைக்கு, கிடக்கிற நிலையிலே அப்படி அழகு
 உண்டோ? என்ன, நாட்டாரை நோக்க வேறுபட்டதாயன்றோ 
கிடையழகு
 இருப்பது என்கிறார் ‘நாட்டார்’ என்று தொடங்கி.
 
 4. வாயஸேந தத: தேந 
பலவத்க்லிச்யமாநயா
 ஸ மயா போதித: ஸ்ரீமாந் 
ஸுகஸுப்த: பரந்தப:”
 
 என்பது, ஸ்ரீராமா. சுந். 38 
: 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
 சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, 
பாவம், ‘இவன் உணரில்’
 என்று தொடங்கும் வாக்கியம்.
 |