|
ஆளவந
ஆளவந்தார் அருளிச்செய்தாராகத்
திருமாலையாண்டான் பணிப்பர். 1இதனை எம்பெருமானார் கேட்டருளி “இங்ஙனேயாக அடுக்கும்,
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது; ஆசைப்பட்டபடியே
திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச்செய்தார். இவர் தாம் 2பூவேளைக்காரரைப்
போலே, இவை காணாதபோது கைமேலே முடிவார் ஒருவரேயன்றோ. 3“கேசவன் தமர்” என்ற திருவாய்மொழி
தொடங்கி லோபத்தாலே, கிருபையை, ‘விதி’ என்ற சொல்லால் சொல்லிப் போந்தவர்,
இப்பாசுரத்தில் அதனை ‘அருள்’ என்று வெளியிடுகிறார். 4ஸ்வரூபத்திற்குத்
தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.
(9)
_____________________________________________________
1. ’இதனை’ என்றது,
“திருச்சக்கரம் சங்கினொடும்” என்றதனைத்
திருஷ்டாந்தமாக யோஜித்த ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாகத்தைக்
குறித்தபடி.
எம்பெருமானார் நிர்வாகத்தில் “அடியேனொடும்” என்ற உம்மை, இழிவு
சிறப்பு.
“கூராராழி வெண்சங்கு” என்பது, திருவாய். 6. 9 : 1.
2. பூ வேளைக்காரர் -
அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில்
குத்திக்கொண்டு முடியுமவர்கள். ‘இவை காணாத
போது’ என்றது, இவற்றைக்
கைமேலே காணாத போது என்றபடி. “கைமேலே முடிவார்” என்பதற்குப்
போரிலே முடிவார் என்பது வேறும் ஒரு பொருள்.
3. “அருள்செய்து” என்ற
இடத்தில் “விதி” என்ற சொல்லை அமைக்காததற்குக்
காரணம் என்? என்ன, அதற்கு விடை அருளிச்
செய்கிறார் ‘கேசவன்தமர்’
என்று தொடங்கி. ‘கேசவன்தமர்... தொடங்கி’ என்றது, “கேசவன்தமர்”
என்ற
திருப்பதிகத்திலுள்ள “மதுசூதனை” என்கிற திருப்பாசுரம் தொடங்கி
என்றபடி. ‘தொடங்கி’
என்றது, பின்னே வருகின்ற “என்றும் ஒன்றாகி”,
“கையார் சக்கரம்”, “அம்மான் ஆழிப்பிரான்”
என்ற திருப்பாசுரங்களைத்
திருவுள்ளம்பற்றி, லோபத்தாலே-கிருபையை வெளியிட ஒண்ணாது என்ற
லோபத்தாலே.
4. “அருள்செய்து” என்னும்
வினையெச்சம், “அடியேனொடும் ஆனான்”
என்பதில் “ஆனால்” என்ற வினையைக் கொண்டு முடிகிறது என்று
தோன்றுவதற்காக “அருள்செய்து அடியேனொடும் ஆனான்” என்று
மேலே அருளிச்செய்தார். இப்போது,
“அடியேன்” என்ற பதத்திலே
நோக்காக, அதற்கு மறுதலைப் பொருளாயுள்ள ‘சேஷி’ என்ற சொல்லைக்
கொணர்ந்து கூட்டிப் பொருள் அருளிச்செய்கிறார் ‘ஸ்வரூபத்திற்கு’ என்று
தொடங்கி.
|