முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
342

அன

    அன்றிக்கே, ‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு 1“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே, அடியார்களைக் காக்கும்பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல். எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி; ஆதலால், “மா உரு” என்கிறது. என்றது, 2தோன்றுதல்” என்கிறபடியே, பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை என்றபடி. 3“பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ. கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார் “வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.

    4
இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும், 5இவன் கர்மங்கள் அவன்

____________________________________________________

1. மூன்றாவது பொருளை அருளிச்செய்கிறார் ‘எந்நின்ற யோனியுமாய்’
  என்று தொடங்கி. எல்லாச் சாதிகளிலும் பிறந்தவனே! என்பது பொருள்.
  “எந்நின்ற” என்பது, திருவிருத்தம். மா உரு-விலக்ஷணமான விக்கிரஹம்.
  இது, மேலே அருளிச்செய்த மூன்று வகையான பொருள்கட்கும் ஒக்கும்.
  “வேண்டுமாற்றால் எம் மா உருவும் ஆவாய்” என்பதனை, மேலே
  அருளிச்செய்த மூன்று வகையான பொருள்கட்கும் தனித்தனியே கூட்டிக்
  கோடல் வேண்டும். ஆக, இச்சித்தபடியே எங்களுக்காக விலக்ஷணமான
  அவதார விக்கிரஹங்களையுடையவனானவனே! என்பது முதற்பொருள்,
  இச்சையாலே எல்லா வகையாலும் விலக்ஷணமான
  விக்கிரஹங்களையுடையவன் என்பது இரண்டாவது பொருள், அநேகமான
  விக்கிரஹங்களையுடையவனே! என்பது மூன்றாவது பொருள்.

2. தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா
  தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.

3. “ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா:
   தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத் ஹரே: மஹத்”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70. இது, அவனுடைய விக்ரஹம்
  அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது,
  அப்ராக்ருதமாயிருக்கும் என்றபடி.

4. ஆனால், இருவர்க்கும் வாசி யாது? என்ன, ‘இருவர்க்கும்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

5. இவன் கர்மங்கள் அழிவதற்குக் காரணம் யாது? என்ன, ‘இவன் கர்மங்கள்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.