|
அன
அன்றிக்கே, அவற்றோடே
ஒரே சாதியினவான இரண்டு பூக்கள் அலரக் காண்கின்றிலேன் என்கிறார் என்னுதல். என் நான் செய்கேனே
- இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என்செய்கேன்? 1திருக்குடந்தையிலே
தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக்கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன, இத்தாமரைகள்
அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! 2‘இக்கூப்பீடு
உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய். 3‘இவை ஒழிய மதுபானம்
செய்யோம்’ என்கையன்றோ இவர்க்கு இங்ஙன் படவேண்டுகிறது. 4இனி, இவை அலர்தலாவது,
விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும். அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.
(2)
522
என்னான் செய்கேன் யாரே களைகண் என்னைஎன் செய் கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உனதாள் பிடித்தே செலக்காணே.
பொ - ரை :-
நான் என்ன காரியத்தைச்
செய்வேன், துணையாவார் வேறு யாவர், என்னை என்செய்ய இருக்கின்றாய், உன்னால் அல்லாமல் மற்றையோரால்
ஒரு குறையும் விரும்பேன், வேலைப்பாடு அமைந்த மதில்களாற் சூழப்பட்ட திருக்குடந்தையில் திருக்கண்
வளர்கின்றவனே!
______________________________________________________
1. “மலர்க்கண் வளர்கின்றான் என் நான் செய்கேன்” என்பதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘திருக்குடந்தையிலே’ என்று தொடங்கி.
2. “நான்” என்பதற்கு பாவம், ‘இக்கூப்பீடு’ என்று தொடங்கும் வாக்கியம்.
சென்றற்றது - முடியும்படி ஆயிற்று.
3. மற்றைப் பூக்களில் மதுவைப் பானம் பண்ண
ஒண்ணாதோ இவர்க்கு?
என்ன, ‘இவை ஒழிய’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
4. சுவாபதேசப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘இனி, இவை’ என்று தொடங்கி.
|