| வற 
1என்னளவு 
கிட்டாதார் எனக்கு ரக்ஷகர் ஆகவோ. என்னை என்செய்கின்றாய்-நீ செய்து தலைக்கட்டப் பார்த்தாயோ? 
அன்றிக்கே, ‘சாதநாநுஷ்டானம் செய்து வாரும்’ என்று நளன் தமயந்திக்கு வழி காட்டினாற்போலே
கைவிடப் பார்த்தாயோ? என் நான் செய்கேன்-2தாம் கைவாங்கின படி. யாரே 
களைகண்-பிறர்பக்கல் நின்றும் கைவாங்கினபடி. என்னை என்செய்கின்றாய்-3“என்னை 
ஆராதிக்கின்றவன் ஆவாய், என்னை நமஸ்காரம் செய்வாய்” என்னப் பார்த்தாயோ? 4“துக்கப்படாதே” 
என்னப் பார்த்தாயோ? 
 5உன்னால் 
அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-6“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை 
அடை
 
____________________________________________________ 
1. ‘என்னளவு கிட்டாதார்’ 
என்றது, உன் திருவருளுக்கு என்னைப் போன்றுஇலக்கு ஆகாதவர்கள் என்றபடி. அன்றிக்கே, என்னளவு 
ஞான பக்தி
 இல்லாதவர் என்னுதல்.
 
 2. “என் நான் செய்கேன், 
‘யாரே களைகண், என்னை என்செய்கின்றாய்”
 என்னும் இம்மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களும், 
அவனே
 ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப்படுகின்றன என்னுமிடம் தோற்ற
 அருளிச்செய்கிறார் ‘தாம்’ 
என்று தொடங்கி. ‘தாம் கைவாங்கினபடி’
 என்றது, ஆகிஞ்சந்யத்வம்; ‘பிறர் பக்கல் நின்றும் 
கை வாங்கின படி’
 என்றது, அநந்யகதித்வம்; ‘அவனே ரக்ஷகன்’ என்னுமிடம் கூறுவது.
 
 3. “மந்மநா பவ மத்பக்தோ 
மத்யாஜீ மாம் நமஸ்குரு
 மாமேவ ஏஷ்யஸி 
யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”
 
 என்பது ஸ்ரீகீதை. 9. 34.
 
 4. ஸர்வதர்மாந் 
பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
 அஹம் த்வா ஸர்வ 
பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:”
 
 என்பது ஸ்ரீகீதை. 18 : 66.
 
 5. இதுகாறும் அநப்யுபகம்யவாதத்தாலே 
அருளிச்செய்தார்; இனி,
 அப்யுபகம்யவாதத்தாலே அருளிச்செய்கிறார் ‘உன்னால் அல்லால்’ என்று
 தொடங்கி. என்றது, வேறு உபாயங்களிலே தமக்கு ஞானசக்திகளும்
 உண்டாய், வேறு தெய்வங்கட்கு மோக்ஷத்தைக் 
கொடுக்கும்
 சக்தியுமுண்டாகிலும், ஸ்வரூபத்திற்கு விரோதமாகையாலே தமக்கு வேண்டா
 என்கிறார் 
என்றபடி. அநப்யுபகம்யவாதம் - உடன்படாமலே பேசுகின்ற
 வாதம். அப்யுபகம்யவாதம் - உடன்பட்டுப் 
பேசுகின்ற வாதம்.
 
 6. உன்னால் 
அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு,
 மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். 
அவற்றுள், முதலது, “என்
 நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது.
 என்றது, 
உன்னால் வரும் உன்னை ஒழிய,
 |