முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
351

வாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய். ‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாயபாவம் ஒருசேதனனாலே என்றிருக்கையாலே. அன்றிக்கே, 1பெறுவது உன்னையேயாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன். 2மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூபவிரோதியானது எனக்கு வேண்டாம். 3கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன். அன்றிக்கே, 4‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழிய

____________________________________________________

  வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
  இதனையே அருளிச்செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று
  தொடங்கி. அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது
  என்னை? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று
  தொடங்கி.

1. இரண்டாவது பொருள். “என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும்
  இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது, உன்னாலே பெறும்
  உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும்
  உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி. இதனையே, ‘பெறுவது
  உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும்
  நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு
  - காலபுருஷதானம் வாங்கி.

3. அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி. ‘கடல் கடத்த’
  என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’
  என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி. அப்படிச் செய்தால்,
  அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது
  என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.

4. மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை
  விட்டு, உபயசாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
  ‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது, பிராப்யனான உன்னை ஒழிய
  வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.