|
New Page 1
குலையாதபடி பார்த்தருள வேண்டும்
என்கிறார். 1அடிவிடில் உறுதி குலையுமே, 2அடியே பிடித்து ஜீவித்தவர்
அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது, ருசியில் வந்தால் பரபக்தியையுடையவர், விளம்பத்துக்குக்
காரணம் என்? என்னில், பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத்
திருத்துகைக்காகவும்.
(3)
523
செலக்காண்
கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பி லானே! எல்லா
உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார்
குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய் ஆகா சத்தை
நோக்கி அழுவன் தொழுவனே.
பொ-ரை :- மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள்
காண வல்ல அளவுக்கும் அப்பால் போகும்படியான கீர்த்தியையுடையவனே! முடிவு இல்லாதவனே! எல்லா
உலகங்களையுமுடைய ஒப்பற்ற மூர்த்தியே! பக்தியினால் மேம்பட்டவர்கள் தங்கியிருக்கிற திருக்குடந்தை
என்னும் திவ்விய தேசத்திலே திருக்கண் வளர்கின்றவனே! உன்னைக் காணும்பொருட்டு நான் அலமந்து
ஆகாசத்தை நோக்கி அழுவேன், தொழுவேன்.
வி-கு :-
காண்கிற்பார்: வினையாலணையும் பெயர். உலப்பு-முடிவு. நலம்-பக்தி. அலத்தல் - அலமருதல்;
சுழலுதல்.
ஈடு :- நாலாம்
பாட்டு. 3சர்வேச்வரனாயிருந்து வைத்து அடியார்கட்காகத் திருக்குடைந்தையிலே அண்மையிலிருப்பவனாக
இருக்க, நினைத்த கைங்கரியத்தைப் பெறாமையாலே நோவுபடாநின்றேன் என்கிறார்.
_____________________________________________________
1. “பிடித்தே” என்ற ஏகாரத்தின்
பொருளை அருளிச்செய்கிறார் ‘அடிவிடில்’
என்று தொடங்கி.
2. “உன்னால் அல்லால்”
என்றதற்கு அருளிச்செய்த மூன்றாவது
பொருளுக்குத் தகுதியாக, “பிடித்தே” என்ற ஏகாரத்திற்கு, வேறும்
ஒரு
கருத்து அருளிச்செய்கிறார் ‘அடியே பிடித்து’ என்று தொடங்கி.
3. “எல்லா உலகுமுடைய ஒருமூர்த்தி, குடந்தைக் கிடந்தாய், நான் அலப்பாய்
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன்”
என்பனவற்றைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|