|
க
கிறவன் 1நான்
அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி. உன்னை - 2மேலே
கூறிய இனிமையையுடைய உன்னை என்றுமாம். அலப்பாய்-அலமந்து. 3காணும்போது ‘கண்டு
கொள்ளுகிறோம்’ என்று, சூது சதுரங்கம் பொருது ஆறியிருக்கும் விஷயமன்றே, காணப்பெறாமையாலே வந்த
துடிப்பு. ஆகாசத்தை நோக்கி-4திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே
“அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு வாயுபுத்திரனான
அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே, பிராட்டி
எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ. ‘உன்னை’ என்னா நிற்கச்செய்தே ‘ஆகாசத்தை
நோக்கி’ என்பான் என்? என்னில், ‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, கலக்கத்தின்
காரியம் இருக்கிறபடி. விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த
பரிமாற்றம் பெறாமையாலே. ‘ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப்
பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.
அன்றிக்கே, ஆகாசத்தை
நோக்கி என்பதற்கு, என்னுடைய 5நிராலம்பநதையைப் பார்த்து” என்று
____________________________________________________
1. “நான்” என்றதனையும்
கடாக்ஷித்து, “உன்னை” என்பதற்கு,
பிராப்யபரமாக வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘காண்கிறவன்’
என்று தொடங்கி. ‘நான் அன்றோ’ என்றது, ஆராத காதலையுடைய நான்
அன்றோ என்றபடி.
2. ‘மேலே கூறிய’ என்றது.
“ஒருமூர்த்தி” என்றதனையாதல்; “ஆராவமுதே”
என்றதனையாதல்.
3. அலமருகிறது என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘காணும்போது’ என்று தொடங்கி.
4. ஆகாசத்தை நோக்குகைக்குக்
காரணம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘திருவடியினுடைய’ என்று தொடங்கி.
“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச
ததாபி அதஸ்தாந்
நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய
புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம்
வாதாத்மஜம் ஸூர்யமிவ
உதயஸ்தம்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.
5. நிராலம்பநம்-பற்றுக்கோடு
இல்லாதிருத்தல். அநந்யகதித்வத்தைக்
குறித்தபடி.
|