|
ஆண
ஆண்டான்
அருளிச்செய்வர். அன்றிக்கே, 1“வயோதிகரான
தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சுவிட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களையுடையவராய்த்
துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க
மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல். 2அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும்
செய்யாநின்றேன், பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன். சபலர் செய்யுமதனையும் செய்யாநின்றேன்,
விரக்தர் செய்யுமதனையும் செய்யாநின்றேன்.
(4)
524
அழுவன் தொழுவன் ஆடிக்
காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம்
நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழுவொண் பழனக் குடந்தைக்
கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!
தொழுவ னேனை உனதாள்
சேரும் வகையே சூழ்கண்டாய்.
பொ-ரை :-
கலக்கத்தாலே அழுவேன், தெளிவாலே தொழுவேன், மயக்கத்தால் ஆடுவேன், குணங்களுக்குப் பரவசப்பட்டுப்
பாடுவேன், துன்பத்தால் அலற்றுவேன், என்னைத் தழுவி நிற்கின்ற காதலாகிற கொடிய பாவங்களால்
நீ வருவதற்குச் சம்பாவனையுள்ள பக்கத்தை நோக்குவேன், வரக் காணாமையாலே நாணங்கொண்டு தலை
குனிந்திருப்பேன், செழுமை பொருந்திய அழகிய வயல்களாற்சூழப்பட்ட திருக்குடந்தை என்னும் திவ்விய
தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே! செந்தாமரைக் கண்ணா! வேறு கதி இல்லாதவனாய்த் தொழுகின்ற
என்னை உன் திருவடிகளைச் சேரும்படி ஒரு நல் விரகு பார்க்க வேண்டும்.
வி-கு :-
ஆடிக் காண்பன் : ஒருசொல். ஆடுவேன் என்பது பொருளாம். தொழுவனேன்: வினையாலணையும் பெயர்.
கண்டாய்: முன்னிலை அசைச் சொல்.
___________________________________________________
1. “ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப:
விலலாப ஆர்த்தவத்
துக்காத் ககநாஸக்தலோசந:”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 13 :
16. இது, கைகேசின் வார்த்தையைக்
கேட்ட தசரதனது துக்கம்.
2. அழுதல்:
உபாசகர், சபலர். தொழுதல்: பிரபந்நர், விரக்தர்.
|