முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
359

New Page 1

வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே. பக்கம் நோக்கி - ‘துன்பமே செப்பேடாக வரும்’ என்றிருக்கையாலே, வருவதற்குச் சம்பாவனையுள்ள திக்கைப் பார்த்து. நாணிக் கவிழ்ந்திருப்பன் - அங்கு வந்து தோற்றக் காணாமையாலே, ‘ஆசைப்பட்டு 1அழகிதாக உண்டோம்’ என்று நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன். அன்றிக்கே, பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் என்பதற்கு, ‘அருகுநின்றார் இவளை என் சொல்லுவர்களோ’ என்றதற்கு நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன் என்னலுமாம்.

    செழு ஒண் பழனம் குடந்தைக் கிடந்தாய்-பெருத்து அழகிதான நீர்நிலைகளையுடைய திருக்குடந்தையிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனே! செந்தாமரைக்கண்ணா-2கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு இடாதாரைப் போலே. வேறு முகத்தாலே என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை, என் ஜீவனம் ஒருமுகம் செய்து கிடக்கிறதன்றோ. தொழுவனேனை -3புறம்பு புகல் அற்று உன்னால் அல்லது செல்லாதபடி கிருபணனான என்னை. அன்றிக்கே, புறம்புள்ள விஷயங்களிலே ஈடுபட்டவனாய்த் தாழ்ந்தவனான என்னை என்னுதல். தொழுவன்-கிருபணன் என்னுதல். தாழ்ந்தவன் என்னுதல். உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் - உன் திருவடிகளைக் கிட்டுவது ஒரு விரகு, 4நான் அறியாதபடி நீயே பார்த்தருள

____________________________________________________

1. ‘அழகிதாக உண்டோம்’ என்றது, வெறுப்பிலே நோக்கு. குறிப்புப்
  பொருளது.

2. என்னுடைய துன்பம் நீக்குதற்குப் பரிகரம் உன் கையிலே உண்டாய்
  இருக்க, நான் துன்புற்றவனாயிருக்க, என்னைக் கடாக்ஷியாதே இருக்கிறாய்
  என்னுமதனைத் திருஷ்டாந்த மூலம் காட்டுகிறார் ‘கையிலே நிதி’ என்று
  தொடங்கி.

3. “தொழுவனேனை” என்பதற்கு, இரண்டு பொருள். முதற்பொருளில்,
  தொழுகை-கார்ப்பண்யகார்யம் என்று கொண்டு, அதனை விரிக்கிறார்
  ‘புறம்பு புகலற்று’ என்று தொடங்கி. இரண்டாவது பொருளில், “தொழுவன்”
  என்பது, தொழும்பன் என்றபடியாய், தாழ்ந்தவன் என்றபடி.

4. “சூழ்கண்டாய்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நான் அறியாதபடி’
   என்று தொடங்கி. சூழ்ச்சியாவது, புறம்பே ஒருவர் அறியாதபடி பார்க்கும்
   விரகு.