முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
360

New Page 1

வேண்டும். 1தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய், ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி. என்றது, வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரியசிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

(5)

525

    சூழ்கண் டாய்என் தொல்லை வினையை அறுத்துன் னடிசேறும்
    ஊழ்கண் டிருந்தே தூராக் குழி தூர்த்து எனைநா ளகன்றிருப்பன்
    வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
    யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!

   
பொ-ரை :- இயல்பாக அமைந்த புகழையுடைய பெரியோர்கள் நித்தியவாசம் செய்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! யாழினிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே! என்னுடைய பழைமையான இரு வினைகளையும் அறுத்து உனது திருவடிகளைச் சேர்வதற்குரிய முறையை யான் அறிந்திருந்தும், தூர்க்க முடியாத இந்திரியங்களாகிற குழியை நிறைத்துக்கொண்டு எத்தனை காலம் உன்னை நீங்கி இருப்பேன்? உன்னைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும்.

    வி-கு :-
ஊழ்-முறைமை, தூரா-நிறைதல் இல்லாத. தூர்த்து-நிறைத்து. எனை-எத்தனை. அரியேறே! சூழ்கண்டாய் என்க, அரி ஏறு-ஆண் சிங்கம்.

    ஈடு :-
ஆறாம் பாட்டு. 2உன் இனிமையை அநுபவிக்கிற எனக்கு ஒரு பிரிவு வாராதபடி உன்னை அடைவதற்குத் தடையாகவுள்ள விரோதிகளையும் போக்கி, உன்னைப் பெறுவது ஒரு விரகு பார்த்தருள வேண்டும் என்கிறார்.

____________________________________________________

1. “அழுவன் தொழுவன்” என்பன போன்ற ஆற்றாமை உண்டாயிருக்க,
  “சூழ்கண்டாய்” என்று, நீயே விரகு பார்த்தருள வேணும் என்கிறது என்?
   என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தம்முடைய ஆற்றாமை’ என்று
   தொடங்கி.

2. திருப்பாசுரத்தில், “உன்னடி சேரும்” என்பது முடியக் கடாக்ஷித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘உன் இனிமையை’ என்று தொடங்கி.