|
526
526
அரியேறே! என்னம்பொற் சுடரே! செங்கட்
கருமுகிலே!
1எரியேய்
பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமைஎன்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன்இனி உன்சரணம் தந்துஎன் சன்மம் களையாயே.
பொ-ரை :-
அரியேறே! அழகிய பொன்னின் சுடரே! சிவந்த கண்களையுடைய கரிய முகிலே!
நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே! நான்கு திருத்தோள்களையுடைய எந்தையே! உன்னுடைய திருவருளாலே
என்னைப் பிரிதல் இல்லாத அடிமை கொண்டவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே!
இனி, தரித்திரேன், உன்னுடைய திருவடிகளைத் தந்து என் பிறவியை நீக்குவாய்.
வி-கு :- வியாக்கியானத்துக்குப்
பொருந்த “எரியேய் பவளக் குன்றே!” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம்,
‘எரியே பவளக்குன்றே’ என்பது. ‘அடிமை கொண்டாய்!’ என்பதனை விளிப்பெயராகக் கொள்ளாது,
அடிமை கொண்டாய், ஆகையாலே, சரணம் தந்து சன்மம் களையாய் எனக் கோடலுமாம். களையாய் என்றது,
களைய வேண்டும் என்றபடி. உடன்பாட்டு முற்று.
ஈடு :- ஏழாம் பாட்டு. 2உன்
கிருபையாலே உன் வைலக்ஷண்யத்தைக் காட்டி அடிமையாதல் அல்லது செல்லாதபடி ஆக்கின பின்பு, உன் திருவடிகளைத்
தந்து பிறகு சம்சாரத்தை அறுக்க வேண்டும் என்கிறார்.
அரியேறே-3தன்னினின்றும் வேறுபட்ட
பொருள்களுக்கெல்லாம் தானே கடவனாகையாலே வந்த மேனாணிப்பு.
____________________________________________________
1. “எரியே பவளக்குன்றே” என்பது,
இப்பொழுது உள்ள பாடம்.
வியாக்கியானத்தை நோக்கும்போது “எரியேய் பவளக்குன்றே” என்ற
பாடமே சிறப்புடைத்தாம்.
2. “அரியேறே” என்பது போன்றவைகளையும்,
“உனதருளே” என்பது
போன்றவைகளையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. மேற்பாசுரத்தில்
எல்லாப் பொருள்களும் வேறுபட்டிருக்குந்தன்மையால்
வந்த மேனாணிப்பு என்று அருளிச்செய்து, இங்கே,
சர்வ நிர்வாஹகன்
ஆகையால் வந்த மேனாணிப்பு என்கையாலே கூறியது கூறல் இல்லை.
|