|
என
என் அம்பொன் சுடரே -
அம்மேன்மைக்குச் சிறிது உள்ளாகப் பார்த்தவாறே பிரகாசித்துத் தோற்றுகிற ஒளியாலே விலக்ஷணமான
பொன் போலே விரும்பத்தக்கதான ஒளியையுடையவனே! அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின்
‘என் அம்பொன் சுடரே’ என்கிறார். செங்கண் கருமுகிலே - 1அதற்கும் அடியான
திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி. ஏரி ஏய் பவளக் குன்றே - நக்ஷத்திரமண்டலம்
வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே! சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம். அன்றிக்கே,
எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே!
என்றபடி. இதனால் 2ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது. உகவாதார்க்கு
நெருங்கவும் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார். நால்தோள் எந்தாய் - கல்பக
தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே!
3‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.
உனது அருளே பிரியா
அடிமை என்னைக் கொண்டாய்-4உன்னுடைய கேவல கிருபையாலே என்னை நித்திய கைங்
____________________________________________________
“கூறியது கூறினும் குற்ற
மில்லை
வேறொரு பொருளை விளக்கு
மாயின்”
என்பது இலக்கணம்.
1. ‘அதற்கும் அடியான’ என்றது,
“அரியேறே” என்ற மேன்மைக்கும்
அடியான என்னுதல். “அம்பொற்சுடரே” என்ற தேஜஸ்ஸுக்கும் அடியான
என்னுதல்.
2. “எரி” என்றதனை நோக்கி,
‘ஒளியை’ என்றும், “பவளக்குன்று”
என்றதனை நோக்கி, ‘விரும்பப்படுகின்ற தன்மை’ என்றும்
அருளிச்செய்கிறார்.
3. “ஆயதாஸ்ச” என்ற சுலோகத்தைத்
திருவுள்ளம்பற்றித் ‘திருவடி’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
4. ‘உன்னுடைய
கேவல கிருபையாலே’ என்றது, “அருளே” என்றதிலேயுள்ள
ஏகாரத்தைத் திருவுள்ளம்பற்றி.
|