|
கர
கரியத்தைக் கொண்டாய். அருள் - அருளாலே. குடந்தைத்
திருமாலே-அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய பிராட்டியாரோடேகூடத் திருக்குடந்தையிலே வந்து திருக்கண்
வளர்ந்தருளுகிறவனே! ‘ஒரு தேச விசேடத்தே’ என்னாதபடி தேசத்தில் குறை இல்லை, திருமகள்
கேள்வனாகையாலே பேற்றிற் குறை இல்லை. 1“சீதாபிராட்டியாரோடுகூட நீர் மலைத்தாழ்
வரைகளில் உலாவும்பொழுது நான் எல்லாவித கைங்கர்யங்களையும் எப்பொழுதும் பண்ணுவேனாக” என்ற
இளையபெருமாளைப் போலே பற்றுகிறார் இவரும். இனி தரியேன்- அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு
என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது. 2தாய்தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய்
ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க, குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு
போரும் என்ன, உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே - முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப்
போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும்.
3‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது; அதற்கு அடியிலே தரிப்பித்துக்கொண்டு,
பின்னை அறுக்க வேண்டும் என்கிறார்.
(7)
_____________________________________________________
1. “பவாஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு
ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்கிரத:
ஸ்வபதச்ச தே”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 25. பெருமாளைப்
பார்த்து இளைய
பெருமாள் கூறியது.
2. தரித்திருக்கப் போகாமைக்குக் காரணம்
என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தாய்தந்தையர்’ என்று தொடங்கி. ‘தரியாமை எவ்வளவு
போரும் என்ன’ என்றது, இந்தச் சரீர சம்பத்தை அறுத்துத் திருவடிகளைத்
தரப் பற்றுமோ என்ன என்றபடி.
3. இது புண்ணோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘புண்ணார்’
என்று தொடங்கி.
மண்ணாய் நீர்எரிகால் மஞ்சுலாவும்
ஆகாசமுமாம்
புண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்
தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்திரு வேங்கடவா!
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனையாட்
கொண்டருளே.
என்பது, பெரிய திருமொழி.
|