|
527
527
களைவாய் துன்பம்
களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமிப்
படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் எனதாவி
சரிந்து போம்போது
இளையா துனதாள் ஒருங்கப்
பிடித்துப் போதஇசை நீயே.
பொ-ரை :- வளைந்த வாயையுடைய சக்கரத்தைப் படையாக
வுடையவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே! மாமாயனே! என் துன்பத்தைப்
போக்குவாய்; போக்காதொழிவாய்; துணையாவார் வேறு ஒருவரையுமுடையேன் அல்லேன்; சரீரம் தளர்ந்து
என் உயிரும் இந்த உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாயிற்று; தளராமல் உன் திருவடிகளை
ஒருபடிப்படப் பிடித்துக்கொண்டு போவதற்கு நீ சம்மதிக்க வேண்டும்.
வி-கு :-
“துன்பம் என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டுக. களைகண் - துணை. இளைத்தல்
- நெகிழ்தல்.
ஈடு :- எட்டாம்
பாட்டு. 1“தரியேன்” என்ற பின்பும் முகங்கிடையாமையாலே கலங்கி; அநுபவம் பெற்றிலேனேயாகிலும்,
‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் குலைகிறதோ என்று அஞ்சாநின்றேன்;
அது குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
களைவாய் துன்பம்
களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் - நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்,
நான் குறைவற்றேன், 2“நீயே உபாயமாக
_____________________________________________________
1. “ப்ரஸக்தஸ்யஹி ப்ரதிஷேத:”
என்கிற நியாயத்தாலே, இப்போது
‘விஸ்வாசம் குலையாதபடி செய்ய வேணும்’ என்கைக்குக் காரணம்
யாது?
என்ன, அதற்கு விடையருளிச்செய்யுமுகத்தால் அவதாரிகை
அருளிச்செய்கிறார். “இளையாதுனதாள்”
என்பது போன்றவைகளைக்
கடாக்ஷித்து ‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று தொடங்கி அருளிச்
செய்கிறார்.
ப்ரஸக்தஸ்யஹி ப்ரதிஷேத: என்ற நியாயமாவது, உண்டாவதற்கு
ஏது இருந்தால் அல்லவா விலக்கு வேண்டும்
என்பது.
2. “துன்பம் களைவாய்,
துன்பம் களையாதொழிவாய்” என்றபடி. குறைவற்ற
பிரகாரத்தை விவரிக்கிறார் ‘நீயே உபாயமாக’
என்று தொடங்கி.
“த்வம்ஏவ உபாயபூதோ மே
பவ இதி ப்ரார்த்தநாமதி:”
என்றது, சரமஸ்லோக பூர்வார்த்த
பிரதிபாத்ய அதிகாரியின் செயலில்
குறை இல்லை என்றபடி.
|