|
528
528
இசைவித் தென்னை உன்தா ளிணைக்கீழ் இருத்தும்
அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெருமூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண
வாராயே.
பொ-ரை :-
என்னை உடன்படச் செய்து உனது திருவடிகளிலே சேரச்செய்த அம்மானே! அழிதல் இல்லாத
நித்தியசூரிகளுக்குத் தலைவரான சேனைமுதலியாருக்குத் தலைவனே! திசைகளில் எல்லாம் ஒளியை
வீசுகின்ற செழுமைபொருந்திய சிறந்த இரத்தினங்கள் சேர்ந்திருக்கின்ற திருக்குடந்தை என்னும்
திவ்விய தேசத்திலே, வருத்தம் இல்லாதவாறு உலகமானது பரவும்படி திருக்கண் வளர்கின்றவனே! நான்
காணும்படி வர வேண்டும்.
வி-கு :- இசைவித்து இருத்தும் அம்மான்
என்க. வில் - ஒளி. வாராய்; உடன்பாடு; வரவேண்டும் என்றபடி.
ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1சர்வேச்வரனாய்
வைத்து எல்லாராலும் பற்றப்படுமவனாகைக்காக இங்கே வந்து அண்மையில் இருப்பவனாய் எனக்கு அடிமையால்
அல்லது செல்லாதபடி செய்த நீ, கண்களால் நான் காணும்படி வர வேணும் என்கிறார்.
என்னை இசைவித்து - நெடுநாள் விமுகனாய் நித்திய
சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து. 2இசையாத என்னை
இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு. உன் தாள் இணைக்கீழ்
இருத்தும் - 3நித்தியசூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே! பரகு
பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷய
_____________________________________________________
1. “ஆதிப் பெருமூர்த்தி, உலகம் பரவக் காண
வாராய்” என்பன
போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “காண வாராய்” என்ற அளவிலே சொல்ல
அமைந்திருக்க “இசைவித்து
என்னை” என்கிறதற்குப் பயன் அருளிச் செய்கிறார்’ ‘இசையாத’
என்னைஎன்று தொடங்கி. இவ்விடத்தில், “யான் ஒட்டி என்னுள்” என்ற
திருப்பாசுரம் அநுசந்தேயம்.
‘இசைந்திருந்த நீ, என்றது, “எதிர் சூழல்புக்கு”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
3.
“அசைவில்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து, பாவம்
அருளிச்செய்கிறார் ‘நித்தியசூரிகள்’
என்று தொடங்கி.
|