முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
370

மாம்படி செய்யுமவன் என்கை. 1“நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதிஅடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி. 2பெருங்காற்றில் பூளைபோலே யாதானும்பற்றி நீங்கும் விரதமாய் அன்றோ முன்பு போந்தது. அம்மானே-பேறு இவரதாயிருக்க, அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது. அசைவு இல் அமரர் தலைவா - நித்தியசூரிகளுக்குத் தலைவனான ஸ்ரீசேனாபதியாழ்வானுடைய காரியமும் இவன் புத்தியதீனமாய் இருக்கிறபடி. அசைவில்லாத அமரர் - நித்தியசூரிகள். அசைவில்லாமையாவது, பிரமன் முதலியோருடைய அழியாமை போலே 3ஆபேக்ஷகமன்று. கல்ப காலத்தை எல்லையாக உடையது அன்று என்றபடி. அன்றிக்கே, குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தையுடையவர்கள் என்னுதல். ஆதிப் பெருமூர்த்தி-இவ்வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே! என்றது, உலகத்திற்கெல்லாம் காரணமாயிருக்கின்ற சர்வாதிகனே! என்றபடி. மூர்த்தி - ஸ்வாமி.

    திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை - திசைகளிலே ஒளி பரவாநின்றதாய், காட்சிக்கு இனியதாய், பெருவிலையனான இரத்தினங்கள் சேராநிற்கிற திருக்குடந்தையிலே. அசைவுஇல் உலகம் பரவக் கிடந்தாய் - உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய். வருத்தம் அறுதலாவது, கண்களால் காணமுடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம்

___________________________________________________

1. அழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
  நிழலும் அடிதாறு மானோம் - சுழலக்
  குடங்கடலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத்
  தடங்கடலை மேயார் தமக்கு.

  என்பது, பெரிய திருவந்தாதி.

2. ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
  பூளை யாயின கண்டனை
இன்றுபோய்ப் போர்க்கு
  நாளை வாவென நவின்றனன் நாகிளங் கமுகின்
  வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.

  என்பது, கம்பராமாயணம்.

3. ‘ஆபேக்ஷிகமன்று’ என்றது, நம்மைக்காட்டிலும் நாலுநாள் சாவாதிருக்கிற
  தன்மையையிட்டு, அவர்களை ‘அமரர்’ என்னாநின்றதேயன்றோ; அப்படி
  அன்று என்றபடி.