|
த
தீர்தல். அன்றிக்கே, 1அசைவில்லாத உலகமான
நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல். அன்றிக்கே,
2அசைவுண்டு - இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய்
என்னுதல். ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள
இருக்கை அன்றிக்கே, மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி.
கிடந்தாய் காண வாராய் - திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி
நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும். செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு,
3‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’
என்று நிர்வஹிப்பர்கள்.
(9)
529
வாரா அருவாய் வரும்என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
பொ-ரை :-
புறத்தில் காணும்படி வாராமல் அருவாய் மனத்தின் கண் தோன்றிக்
காட்சி அளிக்கின்றவனே! அழிதல் இல்லாத திருமேனியையுடையவனே! ஆராவமுதம் போன்று அடியேனுடைய நெஞ்சுக்குள்ளே
தித்திக்கின்றவனே! தீராத வினைகள் எல்லாம் தீரும்படியாக என்னை அடிமை கொண்டவனே! திருக்குடந்தையாகிய
திவ்விய தேசத்தையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் இங்கே அடியேன் அலைந்து திரிவேனோ?
வி-கு :- மூர்த்தி - சரீரத்தையுடையவன்.
ஆவியகம் - ஆவியில்; அகம்: ஏழாம் வேற்றுமையுருபு. தீர ஆண்டாய் என்க. உழலுதல்- அலைந்து திரிதல்.
_____________________________________________________
1. அசைவில்லாத-ஞானத்திலே குறைவு இல்லாத.
2. அசைவில் - அசைவினாலே என்றபடி. இப்பொருளில்
“அசைவில்”
என்பது, ஒரு சொல்.
3. ஆராவமுதாழ்வார்
- திருக்குடந்தை எம்பெருமான். திருமழிசைப் பிரான் -
திருமழிசை ஆழ்வார். வில் வீசுதல் -
ஞான ஒளி உலகம் எங்கும் பரவுதல்.
|