|
வற
வற்றைப் போக்கி என்னை
அடிமை கொண்டாய் என்றுமாம். திருக்குடந்தை ஊராய் - என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே
வந்து அண்மையில் இருப்பவனே! என்றது, 1நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து
கிடக்கிறவனே! என்றபடி. 2ஒருநத்தம் இல்லாதான் ஒருவனையோ நான் பற்றிற்று. இதனால்,
பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றைக்காட்டிலும் இதற்கு உண்டான வேறுபாட்டினைத் தெரிவிக்கிறார்.
உனக்கு ஆட்பட்டும் - சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும். அடியேன்
- யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது. இன்னம் உழல்வேனோ-என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும்
உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம்
எத்தனை திருப்பதிகள் புக்குத் 3தட்டித் திரியக்கடவேன் என்கிறார்.
(10)
530
உழலை என்பில் பேய்ச்சி
முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக்
கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச்
சொன்னஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார்
காமர் மானேய் நோக்கியர்க்கே.
பொ-ரை : உழலை கோத்தாற்போலே இருக்கின்ற
எலும்புகளையுடைய பூதனையினது முலை வழியே அவளுடைய உயிரையும் உண்டவனான கண்ணபிரானுடைய திருவடிகளையே
உபாயமாகக் கொண்ட குருகூர்ச் சடகோபராலே வேய்ங்குழலின் இசையைக்காட்டிலும் இசை மிகும்படியாக
அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும்
இளமை தீரும்படி வல்லவர்கள் மானைப் போன்ற பார்வையையுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவரேயாவர்.
வி-கு :-
உழலை - தடைமரம், “பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப்புடைய நம்பி” என்பது, சிந். 713. பேய்ச்சி
- பூதனை.
___________________________________________________
1. ‘நான் கிட்டாத அம்சத்துக்கு
நீ கிட்ட வந்து கிடக்கிறவனே’ என்றது, நீ
இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க,
நான் இருக்கிற
இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி
2. “ஊராய்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒரு நத்தம்’ என்று
தொடங்கி.
3. தட்டித் திரிதல் -
பலம் இல்லாதவனாய்த் திரிதல்.
|