|
New Page 1
‘கானார் ஏனம்’
என்கிறார். 1காடு அடங்கக்
கோலம் செய்தலைக் குறித்தபடி. அன்றிக்கே, மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலே வாழ்கின்ற ஏனம்
என்பார் ‘கானார் ஏனம்’ என்கிறார் என்னலுமாம்.
இன்னம் கற்கி ஆம்
- 2மேல் வரும் விரோதத்தைப் போக்குகைக்கும் இன்னம் கற்கியாக இருந்தான் என்றது,
என் காரியம் சமைந்த பின்பும் “சம்சாரத்தில் நின்றும் கால் வாங்குந்தனையும் இவர்க்கு என்
வருகிறதோ?” என்று கொண்ட குதை மாறுகின் றிலன் என்றபடி. 3நான் தப்புகைக்குப் பிறந்த
பிறவிகளைப் போலவே போரும் அவன் என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும்.
4நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத்தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான்.
கார் வண்ணனே-நீர்கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை. மழை பெய்தானாய் இருக்கின்றிலன்.
வண்ணம் - ஸ்வபாவம். மீ்னாய் என்று தொடங்கி, என்னை முற்றவும் தான் ஆனான் என முடிக்க.
453
கார்வண்ணன் கண்ணபிரான்
கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர்வள வொண்கழனிக்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர்வண்ண வொண்தமிழ்கள்
இவைஆ யிரத்துள் இப்பத்தும்
ஆர்வண்ணத் தாலுரைப்பார்
அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.
____________________________________________________
1. ‘காடு அடங்கக்
கோலம் செய்தலைக் குறித்தபடி’ என்றதில், ‘கோலம்’
என்பது, சிலேடை: அழகு என்றும், வராகம்
என்றும் பொருள்.
2. ‘மேல் வரும் விரோதத்தைப்
போக்குகைக்கும்’ என்ற உம்மை, மேலே
கூறிய ‘விரோதியைப் போக்குகைக்காக இரண்டு வடிவுகளைக்
கொண்டான்’
என்றதனைத் தழுவுகின்றது. கொண்ட குதை - கொண்ட உத்யோகம்.
3. பல அவதாரங்களைக் கூறியதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
‘நான்
தப்புகைக்கு’ என்று தொடங்கி.
4. இருவர் பிறவிகட்கும் காரணம் யாது? என்ன, ‘நான் கர்மத்தாலே
என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
|