முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
380

தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத் தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது, கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும். 

531

        மானேய் நோக்குநல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
        வானார் வண்கமுகும் மது மல்லிகை கமழும்
        தேனார் சோலைகள்சூழ் திருவல்லவாழ் உறையும்
        கோனாரை அடியேன் அடிகூடுவது என்று கொலோ?

    பொ-ரை :- மான் பார்வை போன்ற பார்வையையுடைய பெண்களே! வினையேன் நாள்தோறும் மெலியும்படியாக, ஆகாயம் வரையிலும் உயர்ந்திருக்கிற வளவிய பாக்குமரங்களும், தேன் பொருந்திய மல்லிகையும் வாசனை வீசுகின்ற தேன்பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேச்வரனுடைய திருவடிகளிலே அடியேன் சேர்வது என்றுகொல்? என்கிறாள்.

    வி-கு :- “மானேய்” என்பதில், ஏய்: உவம உருபு. நோக்கு - கண்கள். பார்வையுமாம். கமுகு-பாக்கு மரம். மல்லிகை - முல்லை விசேடம். கோனார் என்பதில், கோ என்பதற்கு, தலைவன் என்பது பொருள்; னகர ஒற்று, சாரியை; ஆர், உயர்வுப்பொருளைக் காட்ட வந்த விகுதி.

    இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

    ஈடு :-
முதற்பாட்டு. 1தோழிமாரைக் குறித்து, திருவல்லவாழிலே நின்றருளின சர்வேச்வரன் திருவடிகளைக்கிட்டப் பெறுவது என்றோ? என்கிறாள்.

    மான் ஏய் நோக்கு நல்லீர் - 2“நான் திருவல்லவாழிலே போய்ப் புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித் திருவருள் புரிய வேணும் என்கிறாள்” என்று

___________________________________________________

1. “திருவல்லவாழ் உறையும் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று
   கொலோ” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “நோக்கு” என்பதற்குப் பார்வை என்று பொருள் கொண்டு,
  தோழிமாருடைய பார்வையை வர்ணிப்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘நான் திருவல்லவாழிலே’ என்று தொடங்கி.