முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
384

மல

மல்கா நின்றது என்பதனைத் தெரிவித்தபடி. 1அவ்வூரிற் சோலைக்கு நீர் இத்தலையில் மெலிவு போலே காணும். ஆகாயத்தைக் கண்செறி இட்டாற் போல் இருத்தலின் ‘வானார்’ என்கிறது. 2இவள் இருக்கிற இடம், “மரங்கள் எல்லாம் உலர்ந்து விட்டன” என்னும்படியாக இருக்கும். அவன் இருக்கிற இடம், “காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலத்தைக் கொடுக்கக்கூடியனவாக இருக்கும்.” காட்சிக்கு இனியதாக இருத்தலின் ‘வண்கமுகு” என்கிறது. “குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும், தலையார்ந்த இளங்கமுகு” என்னுமாறு போலே இருத்தல். 3அன்றிக்கே, கொடி தொடர வேண்டாதே, தானே கொடிக்கு உடம்பு கொடுத்து நிற்கிற ஒளதார்யம் எனலுமாம். மெய்யே கொடுக்கிற ஒளதார்யம் அன்றோ இது. மதுவையுடைத்தான மல்லிகைகளின் பரிமளம் இவள் இருந்த இடத்தே வந்து அலை எறிதலின், ‘மல்லிகை கமழும்’ என்கிறாள். 4மலட்டுக் கொடியாயிராமல் பூகத்தோடே அணைந்து பரப்பும் பூவாயிருத்தலின், ‘மது மல்லிகை’ என்கிறாள். 5இதற்கு முன்பு சொன்னவை எல்லாம் ஆஸ்ரயமாத்திரமேயாய்த் தேனே மிக்கிருத்தலின்,

__________________________________________________

  கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் என்று கோடலுமாம். ‘அத்தலை’
  என்றது, தேசத்தை. கோனாரை என்று கோடலுமாம்.

1. “மெலிய, வண்கமுகு” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘அவ்வூரிற் சோலைக்கு’ என்று தொடங்கி. கண்செறியிடுதல் - கபளீகரித்தல்.

2. இவற்றை இப்படி வர்ணிப்பதற்குத் தான் இருக்கிற இடம் இப்படி
  இல்லையோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவள் இருக்கிற
  இடம்’ என்று தொடங்கி. “அபி விருக்ஷா: பரிம்லாநா:”, “அகாலபலி நோ
  வ்ருக்ஷா:” என்பன, ஸ்ரீராமா.

      இது, காட்சிக்கு இனியதாக இருத்தலாவது யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘குலையார்ந்த’ என்று தொடங்கி. இது, பெரிய
  திருமொழி, 6. 9 : 8.

3. வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
  ‘மெய்யே’ என்றது, சிலேடை; சரீரமும், சத்தியமும் என்பன பொருள்.

4. மல்லிகையானது மதுவையுடைத்தாம்போது, மலர்கள் நிறைந்திருந்தால்
  ஒழியக் கூடாமையாலே அருளிச்செய்கிறார் ‘மலட்டுக்கொடி’ என்று
  தொடங்கி.

5. “மது மல்லிகை கமழும்” என்று வைத்து, “தேனார் சோலைகள்” என்று
   விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இதற்கு முன்பு’ என்று
   தொடங்கி. ‘இதற்கு முன்பு சொன்னவையெல்லாம்’ என்றது, கமுகையும்
   மல்லிகையையும். ஆஸ்ரயம்-இடம்.