| ஒ 
ஒருபொருளைத் திருமேனியாகக்கொண்டு 
முகங்கொடுத்துக் கொண்டு நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங்களையும் ஜங்கமங்களாயும் 
விலங்குகளாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி. நித்தியரும், முக்தரும், சம்சாரிகளில் ருசியுடையாரும் 
உகந்தருளின நிலங்களைப் பற்றியன்றோ கிடப்பது. 1“இயல்பாயமைந்த சேஷத்வத்தையுடைய 
நித்தியசூரிகளும், சம்சார சம்பந்தம் நீங்கப்பெற்ற முக்தர்களும், பாவங்கள் எல்லாம் நீங்கி 
இனிமேல் சரீர சம்பந்தம் இல்லை என்னும்படி முடிவான சரீரமுடையவர்களான முமுக்ஷு க்களும் ஆகிய இவர்கள், 
மனிதப்பிறவியையும் விலங்கின் பிறவியையும் தாவரப் பிறவியையும் விரும்பினவர்களாய்க் கொண்டு 
ஸ்ரீரங்கத்தை எப்போதும் பற்றியிருக்கிறார்கள் என்று பௌராணிகர்கள் சொல்லிவைத்தார்கள்; 
இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” என்றார் பட்டர். 2இராமாவதாரத்திலும் 
ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந்தார்கள், விபீஷணன் முதலியோர் 
_____________________________________________________ 
1. நித்திய சூரிகள், தாவரம் 
முதலானவைகளாக இங்கே தங்கியிருப்பதற்குப்பிரமாணம் காட்டுகிறார் ‘இயல்பாயமைந்த’ என்று தொடங்கி.
 
 “அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: 
ஸூரய: ஸ்ரஸ்தபந்தா:
 விமல சரம தேஹா இத்யமீ 
ரங்கதாம”
 மஹித மநுஜதிர்யக் ஸ்தாவரத்வா: 
ஸரயந்தே
 ஸுநியதம் இதி ஹஸ்ம 
ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”
 
 என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.
 
 2. ‘சர்வேச்வரன் அவதரித்த 
இடத்திலே நித்தியசூரிகள் முதலானோர்களும்
 அவதரிப்பர்கள்’ என்பதற்கு அநுஷ்டானமும் காட்டுகிறார்
 ‘இராமாவதாரத்திலும்’ என்று தொடங்கி. இலக்குமணன்
 முதலியோர்கள்-நித்தியர்கள். வானரங்களின் 
உருவத்தையடைந்தவர்கள்
 -தேவர்கள். விபீஷணன் முதலியோர்-முமுக்ஷு க்கள்.
 
 வானுளோ ரனைவரும் வான ரங்களாக்
 கானினும் வரையினும் கடித 
டத்தினும்
 சேனையோ டவதரித் திடுமின் 
சென்றென
 ஆனன மலர்ந்தனன் அருளின் 
ஆழியான்.
 
 வளையொடு திகிரியும் வடவை 
தீதர
 விளைதரு கடுவுடை விரிகொள் 
பாயலும்
 இளைஞர்கள் எனவடி பரவவேகி 
நாம்
 வளைமதில் அயோத்தியில் 
வருதும் என்றனன்.
 
 என்பன, கம்பராமாயணம்.
 |