|
பற
பற்றிக் கிடந்தார்கள்.
அது போன்று. 1அதிலும் நடையாடித் திரிகின்றவர்கட்குப் போகைக்கும் தகுதி உண்டேயன்றோ,
அதுவும் இல்லையே அன்றோ தாவரங்களுக்கு.
2ஜனநாதப்
பிரஹ்மராயர் திருமுடிக்குறையிலே ஒரு மரம் வெட்டப்புக, அதனை எம்பார் கேட்டு
‘அல்லாளப் பெருமாளே! ஈச்வர விபூதியை அழிக்கப் பார்த்தாயோ’ என்ன, இவர் சொல்லும் வார்த்தையைக்
கேட்கைக்காக, ‘ஈச்வர விபூதி அல்லாத இடம் உண்டோ’ என்ன, ‘அவை போல் அல்ல காண் இவை;
சார்வபௌமனான ராஜாவும் தேவியுமாக முற்றூட்டாகக் குடநீர் வார்த்து ஆக்கும் சோலை போலே,
பெருமாளும் பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவைகாண்’ என்று அருளிச்செய்தார்.
3உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரதிபத்தி விளைந்தார்க்கு அங்குள்ளவை எல்லாம் உத்தேஸ்யமாகத்
தோன்றுமன்றோ. 4கால் வாங்கியல்லது நிற்க ஒண்ணாத சம்சாரம் அவனுக்குரியது என்னும்
தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாகா நின்றதன்றோ. 5பிரமாணத்தில் பிறக்கும்
___________________________________________________
1. ஆயின், இலக்குமணன் முதலியோர்
போன்று அவதரியாமல்
தாவரங்களாய் அவதரிப்பான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘அதிலும் நடையாடி’ என்று தொடங்கி.
2. நித்திய முக்தர்களுடைய
அவதாரமாகையாலே உத்தேஸ்யம் என்று
மேலே அருளிச்செய்து, பகவானுக்கு விருப்பமுள்ளவையாகையாலும்
உத்தேஸ்யம் என்று அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி அதற்கு ஐதிஹ்யம்
காட்டுகிறார் ‘ஜனநாதப்
பிரஹ்மராயர்’ என்று தொடங்கி.
திருமுடிக்குறை - பெருமாளுடைய
திருமுடிப் பிரதேசமான உபய
காவேரியின் மத்தியப் பிரதேசம். ‘அல்லாளப் பெருமாளே’ என்றது,
ஜனநாதப் பிரஹ்மராயரை நோக்கிய விளி. முற்றூட்டு-பூர்ண அநுபவம்.
3. எல்லார்க்கும் இந்த நினைவு
பிறவாமைக்கு அடி யாது? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘உகந்தருளின நிலங்களிலே’ என்று
தொடங்கி.
4. ‘உத்தேசியமாகத் தோற்றும்’
என்கைக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘கால்வாங்கியல்லது’ என்று தொடங்கி. ‘நின்றதன்றோ’
என்றது,
முக்தருக்கு நின்றதன்றோ என்றபடி.
5. ஆனால்,
இவர்க்கும் நமக்கும் வாசி யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பிரமாணத்தில்’ என்று
தொடங்கி. என்றது, நமக்குப்
பிரமாணம் கொண்டு அறிய வேண்டும், அது இவருக்குப்
|