முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
389

1இ

    1இருவராய்க்கொண்டு பரிமாற வேண்டும் தேசத்திலே தனியே நிற்கின்றான் காண் என்பாள் ‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’  என்கிறாள். அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள். 2நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள். 3அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது; தம்மைச் சொல்லும்போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது. 4‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்; ‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம். பிரணவம், ஜீவப்பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம். ‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம், நான்காம் வேற்றுமையின் பொருள்; 5‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக்கட்டுகிறதன்றோ. கோனாரை அடியேன் - 6நாயகன் தைரியத்தையுடைய நாயகன்,

___________________________________________________

  மாட்டாதே? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கண்ணழிவற்ற’
  என்று தொடங்கி.

1. ‘இருவரும் கூட இருந்து மதுபானம் பண்ணிக் களிக்க’ என்ற மேல்
  வாக்கியத்தின் விவரணம் ‘இருவராய்க் கொண்டு’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

2. நாராயண சப்தம், சர்வேச்வரனைச் சொல்லுவதாய், பிரணவம், சேதனனைச்
  சொல்லுவதாயிருக்கையாலே, ‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்
  போலே’ என்கிறார்.

3. சர்வேச்வரனைக் காட்டும் நாராயண சப்தம், சேதனனையும், சேதனனைக்
  காட்டுகின்ற பிரணவம், சர்வேச்வரனையும் சொல்லுவதற்குக் கருத்து யாது?
  என்ன, இவை பிரதி கோடியை விட்டு இராமையாலே என்று அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘அவனைச் சொல்லும் போது’ என்று தொடங்கி.

4. ‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை
  விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி. ‘நான்காம் வேற்றுமை’
  என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.

5. “அடி கூடுவது என்று கொலோ” என்பது, நான்காம் வேற்றுமையின்
  பொருளாயினவாறு யாங்ஙனம்? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  “என்று கொலோ” என்று தொடங்கி.

6. நாயகி இருந்த இடத்தே நாயகன் வந்து மேல் விழுகை ஒழிய, நாயகி
  விரையலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நாயகன்’
  என்று தொடங்கி.