| இவள 
இவள் தைரியம் இல்லாதவள். 
அடியேன் அடிகூடுவது என்று கொலோ - 1ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் 
பொருளோடே தலைக்கட்டுகிறபடி. 2எல்லா அளவிலும் சொரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், 
பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம், அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளையுடையராகவுமாம், எல்லாக் 
காலத்திலும் ஸ்வரூபம் மாறாது; 3பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை 
வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லையன்றோ. 4தாமான தன்மையில்
5“அடி தொழுது எழு” என்பர்; பரோப தேசத்தில் 6“திண்கழல் சேர்” என்பர்; 
தூதுவிடப்புக்கால் 7“திருவடிக்கீழ்க் குற்றேவல்” என்பர்; பிறரைச் சொல்லப் 
புக்கால் 8“தாட்பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” என்பர்; கலங்கி மடல் 
எடுக்குமளவானாலும் 9“தலையில் வணங்கவுமாங்கொலோ” என்பர்; பித்தேறிச் 
சொல்லும்போதும் 10“கண்ணன் கழல்கள் விரும்புமே” என்னுதல், 11“ஏறிய 
பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” என்னுதல் சொல்வார் இத்தனை. 
____________________________________________________ 
1. பிரணவத்தின் அர்த்தம் 
சொன்னபின் நான்காம் வேற்றுமையின்பொருளைக் கூறுவதற்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
 அருளிச்செய்கிறார் ‘ஸ்வரூபத்துக்கு’ என்று தொடங்கி. ஸ்வரூபம்-சேஷத்வ
 ஸ்வரூபம். ‘வேற்றுமை’ 
என்றது, ‘ஆய’ என்ற நான்காம்
 வேற்றுமையுருபினை.
 
 2. மனைவியானவள் அவனை 
அணைய வேண்டும் என்னாதே “அடி
 கூடுவது என்று கொலோ” என்பான் என்? என்ன அதற்கு விடை
 அருளிச்செய்கிறார் 
‘எல்லாவளவிலும்’ என்று தொடங்கி. அதனை
 விவரிக்கிறார் ‘தாமாகவுமாம்’ என்று தொடங்கி.
 
 3. இதற்குத் திருஷ்டாந்தம் 
காட்டுகிறார் ‘பிண்டத்வ’ என்று தொடங்கி.
 பிண்டம்-மண்தொகுதி. கடம்-குடம். கபாலம்-ஓடு. 
சூர்ணம் தூள்.
 
 4. ‘தாமான தன்மையில்’ 
என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
 வாக்கியத்தை விவரிக்கிறார் ‘தாமான தன்மையில்’ என்று 
தொடங்கி.
 
 5. திருவாய். 1. 1 : 1.
 
 6. திருவாய். 1. 2 : 10.
 
 7. திருவாய். 1. 4 : 2.
 
 8. திருவாய். 2. 1 : 2.
 
 9. திருவாய். 5. 3 : 7.
 
 10. திருவாய். 4. 4 : 8.
 
 11. திருவாய். 
4. 4 : 7.
 |