|
532
532
என்றுகொல் தோழி
மீர்காள்! எம்மைநீர் நலிந்தென் செய்தீரோ!
பொன்திகழ் புன்னை
மகிழ்புது மாதவி மீதணவித்
தென்றல் மணங்கமழும்
திருவல்லவாழ் நகருள்
நின்றபிரான் அடிநீறு
அடியோம் கொண்டு சூடுவதே.
பொ-ரை :-
தோழிமீர்காள்! என்னை வருத்தி என்ன காரியத்தைச்
செய்தீர்கள்? பொன்னைப் போன்று விளங்குகின்ற புன்னை என்ன, மகிழ் என்ன, புதிய மாதவி என்ன,
இவற்றின் மேலே பொருந்தித் தென்றலானது வாசனை வீசுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில்
நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய திருவடிகளில் பொருந்திய நீற்றினை
அடியோங்கள் கொண்டு சூடுவது என்றுகொல்? என்கிறாள்.
வி-கு :-
தோழிமீர்காள்! பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்றுகொல்! எம்மை: தனித்தன்மைப்
பன்மை. மகிழ்-வகுளம். மாதவி-குருக்கத்தி. நீறு-புழுதி. அடியோம்: உளப்பாட்டுத்தன்மைப் பன்மை.
ஈடு :-
இரண்டாம் பாட்டு. 1விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாதரேணுவை
நான் சூடுவது என்று? என்கிறாள்.
என்றுகொல் தோழிமீர்காள்
- ‘எல்லை கடந்த பிராவண்யம் ஆகாது’ என்று விலக்குகிறவர்களையே, தன்பேற்றுக்கு நாள் அறுதியிட்டுத்
தருமவர்களாகக் 2கேட்கிறாளேயன்றோ. 3அவர்கள் உலக அபவாதத்தைப்
பற்றி விலக்குகிறார்கள்; இவள், தனது பேற்றினை, அவர்கள் தங்கள் பேறாக நினைத்திருக்கும்
ஜககண்ட்யத்தாலே கேட்கிறாள். 4தோழிமாரேயன்றோ; இவளுடைய லாபா
___________________________________________________
1. “அடிநீறு அடியோம் கொண்டு
சூடுவது என்றுகொல்”? என்றதனைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘கேட்கிறாளேயன்றோ’
என்றதன்பின், ‘இதற்குக் கருத்து யாது? என்னில்,’
என்பது எஞ்சி நிற்கிறது; அதனைக் கூட்டிப்
பொருள் கோடல் தகும்.
3. அவர்கள் விலக்குவதற்கும்,
இவள் கேட்கிறதற்கும் உரிய ஏதுவை
அருளிச்செய்கிறார் ‘அவர்கள்’ என்று தொடங்கி. ஜககண்ட்யம்-ஒரே
மிடற்றோசை. ‘உலக அபவாதத்தைப்பற்றி விலக்குகிறார்கள்’ என்றது,
‘உலக அபவாதம் கண்டு மீளுவாளோ!
இவ்விஷயத்தில் உறைக்க ஈடு
பட்டவளாயிருப்பாளோ!’ என்று பரீக்ஷார்த்தமாக விலக்குகிறார்கள்
என்றபடி.
4. அவர்களுக்கு
ஜககண்ட்யம் உண்டோ? என்ன ‘தோழிமாரேயன்றோ’ என்று
அதற்கு விடை அருளிச்செய்கிறார். அதனை
விவரணம் செய்கிறார்
‘இவளுடைய லாபாலாபம்’ என்று தொடங்கி.
|