| தன 
தன்மை வாய்ந்தவர்களாயிருக்கிற 
நீங்கள் செய்யவோ என்கிறாள் என்றபடி. மீது அணவித் தென்றல் மணம் கமழும்-இவற்றின்மேலே தென்றலானது 
வந்து அணைந்து பரிமளத்தைக் கொண்டுபோந்து கமழாநின்றது. ‘ஆழ இழியில் பூவில் வெக்கை தட்டும்’ 
என்று மேலெழத் தீண்டி, அங்குள்ளனவெல்லாம் கொண்டுபோந்து கமழா நின்றது என்பாள் ‘மீது 
அணவி’ என்கிறாள். என்றது, 1“தாமரைப் பூக்களின் தாதுக்களோடு சேர்ந்தது” 
என்னுமாறு போலே, பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது என்றபடி.
2அத்தலையில் உள்ளவை அடங்கக்கொண்டு தந்தாமது ஒன்றும் கொடாதே போருகை அந்நிலத்துள்ள 
பொருள்கட்கெல்லாம் ஸ்வபாவம் கண்டீர். 3கலம்பகன் அல்லது சூடப்பொறாத சுகுமாரரைப் 
போலே காணும் தென்றலின் ஸ்வபாவம் என்பாள். ‘பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி 
மீதணவித் தென்றல் மணம் கமழும்’ என்கிறாள். இதனால், பூவில் பரிமளத்தைத் தேடுவாரைப் 
போலே காணும் இது பரிமளத்தில் கலம்பகன் தேடுகிறபடி என்பதனைத் தெரிவித்தபடி. 4செருக்கராயிருக்கும் 
இராஜபுத்திரர்கள் முலைசரிந்தாரைப் ‘போகத்திற்குத் தகுதியுள்ளவரல்லர்’ என்று கழிக்குமாறு 
போன்று, கழிய அலர்ந்தவற்றைப் பாராமல் போருகிறது என்பாள் ‘புது மாதவி மீதணவும்’ 
என்கிறாள். 5கண்களுக்குத் 
___________________________________________________ 
1. வெக்கை தட்டாமல் மேலே 
ஸ்பர்சித்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார்‘தாமரை’ என்று தொடங்கி.
 
 “பத்மகேஸர ஸம்ஸ்ப்ருஷ்டோ 
வ்ருக்ஷாந்தர விநிஸ்ஸ்ருத:”
 
 என்பது, ஸ்ரீராமா. கிஷ். 1 : 71 
என்றது, மகரந்தங்களிலே மேலே ஸ்பர்சித்து
 வந்தாற்போன்று, இந்தத் தென்றலும் மீது அணவி வந்தது 
என்றபடி.
 
 2. “மணங்கமழும்” என்றதற்கு, 
பாவம் அருளிச்செய்கிறார் ‘அத்தலையில்’
 என்று தொடங்கி.
 
 3. பல மரங்களைச் சொன்னதற்கு, 
பாவம் அருளிச்செய்கிறார் ‘கலம்பகன்’
 என்று தொடங்கி. கலம்பகன் - பல மலர்களால் தொடுக்கப்பட்டது.
 பரிமளத்தில் கலம்பகன்-பலவிதமான பரிமளத்தின் கூட்டம்.
 
 4. “புது” என்றதற்கு, பாவம் 
அருளிச்செய்கிறார் ‘செருக்கராயிருக்கும்’ என்று
 தொடங்கி.
 
 5. எங்களை 
நலியக் காண்கிறோம் இல்லையே? என்ன, அதற்கு விடை
 அருளிச்செய்கிறார் ‘கண்களுக்கு’ என்று தொடங்கி.
 |