| இ 
இருக்கிறோம்” என்று 
சொல்லப்பட்டதன்றோ. 1“காற்றே வீசுக” என்று, இவர் கையாலே தொட வேண்டாதபடி 
இடைச்சுவரான கடல் கிடந்தேயாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே 
இருக்கப் பெற்றோமே என்றாரேயன்றோ பெருமாள். 2காலைப் பிடித்து ‘நீ இப்படிச் 
செய்ய வேணும்’ என்று வேண்டிக்கொள்ளுகிறாரேயன்றோ இவருடைய செல்லாமை. நின்ற பிரான் 
அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்றுகொல் - 3பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் 
கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும். 4இவர்கள், இப்போது பிரிய நின்றார்களேயாகிலும் 
கலக்கும்போது அநுபவம் இவர்களுக்கும் ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள். 
5அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களையன்றோ. 6ஸ்ரீ பரதாழ்வானை, 
___________________________________________________ 
  காரணமாக ஆஸ்வாசித்தாற்போலே 
என்கிறார் ‘இது பல’ என்றுதொடங்கி.
 
 “பஹு ஏதத் காமயாநஸ்ய ஸக்யம் 
ஏதேந ஜீவிதும்
 யத் அஹம் ஸா ச வாமோரூ: 
ஏகாம் தரணிம் ஆஸ்ரிதௌ”
 
 என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 10.
 
 1. “வாஹி வாத யத: காந்தா”
 
 என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 6.
 
 2. “வாஹி வாத - காற்றே 
வீசுக” என்றதனை, ரசோக்தியாக
 அருளிச்செய்கிறார் ‘காலைப்பிடித்து’ என்று தொடங்கி. காலை - 
காற்றை.
 
 3. “அடிநீறு” என்பதற்கு, 
பாவம் அருளிச்செய்கிறார் ‘பூவில்’ என்று
 தொடங்கி. “சூடுவது” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் 
‘மயிர்கழுவி’
 என்று தொடங்கி.
 
 4. விலக்குகிறவர்களையும் 
கூட்டிக்கொண்டு “அடியோம்” என்பது என்?
 என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்கள்’ என்று 
தொடங்கி.
 
 5. ஆயின், தோழிமார்க்கு 
அனுபவம் உண்டோ? என்ன, அதற்கு விடை
 அருளிச்செய்கிறார் ‘அவன் வந்தாலும்’ என்று தொடங்கி.
 
 6. இப்படிப் பிரார்த்தித்த 
பேர் உண்டோ? என்ன, அதற்கு விடை
 அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ பரதாழ்வானை’ என்று தொடங்கி.
 
 “யாவந்ந சரணௌ ப்ராது: 
பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ
 ஸிரஸா தாரயிஷ்யாமி ந 
மே ஸாந்தி: பவிஷ்யதி”
 
 என்பது, ஸ்ரீராமா. அயோத். 
98 : 8.
 |