|
New Page 1
‘பிள்ளாய்’ உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?” என்ன,
“பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடி, இருவரும் முறை தப்பாமே கூறு ஒக்க
நின்ற அன்று” என்றான்; அது போன்று, இவளும் ‘அடியோம் கொண்டு சூடுவது என்று’ என்கிறாள்.
1“கோலமாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே” என்னுமவர் அலரோ.
(2)
533
சூடு மலர்க்குழலீர்! துயராட்டி யேனை மெலியப்
பாடுநல் வேதஒலி பரவைத் திரைபோல் முழங்க
மாடுயர்ந் தோமப்புகை கமழும் தண்திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான்கழல் காண்டுங்கொல் நிச்சலுமே.
பொ-ரை :-
மலர்களைச் சூடிக்கொண்டிருக்கின்ற கூந்தலையுடைய தோழிமீர்காள்! பிரிவின்
துன்பத்தால் வருந்துகின்ற யான், மேலும் மேலும் மெலியும்படியாகப் பாடுகின்ற சிறந்த வேதங்களின்
ஒலியானது கடலில் அலைகள் முழங்குமாறு போன்று முழங்க, பக்கங்களில் உயர்ந்து எழுகின்ற ஓமப்புகையானது
வாசனை வீசுகின்ற தண்ணிய திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் நித்தியவாசம் செய்கின்ற
எம்பெருமானுடைய திருவடிகளை நாள்தோறும் காண்போம் கொல்லோ?
வி-கு :- துயராட்டியேன் மெலியப்
பாடும் வேத ஒலி திரைபோல் முழங்க, ஓமப்புகை கமழும் திருவல்லவாழ் என்க. காண்டும்: உளப்பாட்டுத்
தன்மைப்பன்மை வினைமுற்று. கொல்: ஐயத்தின்கண் வந்தது.
ஈடு :- மூன்றாம் பாட்டு. 2தோழிமாரைப்
பார்த்து, நான் அவனை நித்தியாநுபவம் பண்ணப்பெறும் நாள் என்று? என்கிறாள்.
சூடு மலர்க் குழலீர்-‘உங்களைச் சூடு மலர்க் குழலாராக
நான் காண்பது என்றோ’ என்று பிள்ளான் பணிப்பர்.
___________________________________________________
1. ஆயின், இவர்தாம் அப்படி இருப்பவரோ?
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கோலமாம்’ என்று தொடங்கி. இது, திருவாய். 4. 3 :
6.
2.
“நீடுறைகின்ற பிரான் கழல் காண்டுங்கொல் நிச்சலும்” என்றதனைக்
கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|