| என 
என்றது, 1இவள் பூவுக்கு இறாய்க்க, அவர்கள் 
மலர்களைச் சூடி இரார்களேயன்றோ என்றாயிற்று அபிப்பிராயம். அங்ஙன் அன்றிக்கே, 2அவன்தான் 
வந்து இவள் பக்கல் பாவபந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களையாகையாலே, பெரிய திருநாள் 
சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடிகுலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த 
மாலையின் செவ்வியழிந்ததேயாகிலும் மாறாதே வைத்துக்கொண்டிருப்பர்களே அன்றோ; அது இவளுக்கு நினைவூட்டுவதாய் 
நலியாநின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல். 2தென்றலுக்குப் 
பிழைக்கிலும் இவர்களுடைய தரிசனத்திற்குப் பிழைக்கப் போகிறதில்லை. கால் ஒரு கையும் மயிர் 
ஒரு கையுமாகப் பிடித்து நலிகின்றது காணும். 4அவன்தான் வந்தாலும் இவளுக்கு முன்னே 
விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ. “தத்ர காஷாயிந:- அங்குக் காவி உடையணிந்தவர்களை;” 
தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே அழுக்குச் சட்டையும் தாங்களுமாயன்றோ இருப்பது. 
___________________________________________________ 
1. “சூடுமலர்க்குழலீர்” என்றதற்கு, எதிர்காலமாகப் 
பொருள்அருளிச்செய்ததற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘இவள் பூவுக்கு’
 என்று தொடங்கி.
 
 2. “சூடுமலர்க்குழலீர்” என்றதற்கு, இறந்த 
காலமாகப் பொருள்
 அருளிச்செய்கிறார் ‘அவன்தான்’ என்று தொடங்கி.
 
 3. “மலர்க்குழலீர்” என்று நிரூபமாகச் 
சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
 ‘தென்றலுக்கு’ என்று தொடங்கி. தரிசனம்-காட்சி. 
‘கால்’ என்றது, மேல்
 திருப்பாசுரத்தில் கூறிய தென்றலை. ‘மயிர்’ என்றது, இந்தத் திருப்பாசுரத்தில்
 “குழலீர்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
 
 4. ஒரு சம்வாதம் காட்டுவதற்காக, மேலே கூறியதனை 
அநுவதிக்கிறார்
 ‘அவன்தான்’ என்று தொடங்கி. சொல்லப்போகும் அர்த்தத்திற்குப்
 பிரமாணம் 
காட்டுகிறார் ‘தத்ர’ என்று தொடங்கி.
 
 “தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ரபாணீந் 
ஸ்வலங்க்ருதாந்
 ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி ஸ்த்ர்யத்யக்ஷாந் 
ஸு ஸமாஹிதாந்”
 
 என்பது, ஸ்ரீராமா. அயோத். 16 : 3.
 
 இந்தச் சுலோகத்தில் 
“ஸு அலங்கிருதாந்” என்பதுவே இங்கு வேண்டுவது.
 “ஸு அலங்கிருதாந்” என்றதிலுள்ள “ஸு ” என்ற பதத்துக்குப் 
பொருள்
 அருளிச்செய்கிறார் ‘பெருமாளுடையவும்’ என்று தொடங்கி.
 |