முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
398

New Page 1

“விருத்தாந் - முதிர்த்தவர்களை;” தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது. “வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி. விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும். “ஸுஅலங்க்ருதாந் - தங்களை அலங்கரித்தவர்களை;” பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும்போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்துவிடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை. அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

    துயராட்டியேனை மெலியப் பாடு நல்வேத ஒலி-1எனக்குத் துயரை விளைத்தற்காகவேயன்றி, பிராஹ்மணர் வேண்டிச் செய்கிறார்களன்றே. பிராஹ்மணராகில் தார்மிகராயிருக்க வேண்டாவோ? பெண் கொலை செய்யலாமோ? துயராட்டியேன் - 2நலிவார்க்கு ஆஸ்ரயம் வேண்டாவோ? நலிகைக்குத் தென்றலே அமையாதோ? 3திருவடி நடு இரவில் சென்று பிராட்டியைக் கண்டு சிலவார்த்தை விண்ணப்பம் செய்ய, அவள் இவனை ‘இன் னான்’

___________________________________________________

1. “மெலியப் பாடும்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘எனக்குத்
   துயரை’ என்று தொடங்கி. “மெலியப் பாடும்” என்கிறவளுடைய
   மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘பெண்கொலை’ என்று தொடங்கி.

2. “துயராட்டியேனை” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நலிவார்க்கு’
   என்று தொடங்கி. ஆஸ்ரயம் - பற்றுக்கோடு; உடல்.

3. இங்ஙனம் நலியப்படுவதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘திருவடி’
  என்று தொடங்கி.