|
என
என்று அறுதியிட மாட்டாதே, 1‘முன்பு சந்யாசி
வேடம் கொண்டு அவர்பக்கல் நின்றும் என்னைப் பிரித்தாய், இப்போது வானர வேடம்கொண்டு சில
வார்த்தைகளைச் சொல்லி நலியாநின்றாய், இவையெல்லாம் உனக்கு ஆகாதுகாண்.’ வருத்துதல் அழகன்று
- வாராய், நீயும் உன்னை உகந்தாரைப் பிரிந்து நோவுபடுகிறாயன்றோ என்றாள் பிராட்டி.
2செய்யத்தக்கனவானாலும் சிலர்க்கு நலிவானால் தவிர வேண்டாவோ? என்பாள் ‘மெலியப்
பாடும்’ என்கிறாள். 3அவர்கள், எல்லாம் சமைந்தாலல்லது குருகுலத்தை விட்டு
நீங்கார்களாதலின் ‘பாடும்’ என்கிறாள். 4இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே,
நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே காணும் அஸஹ்யமாயிருக்கிறபடி.
5இருவரும்கூட இருந்து கேட்கக்கூடியதனைத் தனியிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதேயன்றோ.
6அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் 7“சீதையினுடைய
_____________________________________________________
1. “ஸ்வம் பரித்யஜ்ய ரூபம் ய: பரிவ்ராஜகரூபவாந்
ஜநஸ்தாநே மயா த்ருஷ்ட: த்வம் ஸ
ஏவ அஸி ராவண:”
“உபவாஸக்ருஸாம் தீநாம் காமரூப நிஸாசர
ஸந்தாபயஸி மாம் பூய: ஸந்தாபம் தந்ந
ஸோபனம்”
என்பன, ஸ்ரீராமா. சுந். 34 : 15, 16.
திருவடியை இராவணனாக நினைத்துப் பிராட்டி கூறியது.
2. செய்ய வேண்டியனவற்றைச் செய்யாமல்
இருக்கப் போமோ என்ன,
‘செய்யத் தக்கனவானாலும்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
3. “பாடும்” என்ற நிகழ்காலத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘அவர்கள்,
எல்லாம்’ என்று தொடங்கி.
4. இவளுக்கு வேதம் பாதகமாம்படி எப்படி? என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவள் தனக்கு’ என்று தொடங்கி. புணர்ப்பு-பிரபந்தம்.
அஸஹ்யமாய்-பொறுக்க
முடியாதபடி.
5. நாயகன் புணர்ப்புக் கேட்டது நல்லதேயன்றிப்
பாதகமாமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இருவரும்’ என்று தொடங்கி.
6. ஈச்வரனுக்குத் தன் புணர்ப்புக் கேட்கலாமோ?
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அவன் பெயர்’ என்று தொடங்கி.
7. “காவ்யம்
ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா: சரிதம் மஹத்” என்பது,
ஸ்ரீராமா. பால. 4 : 7.
|