|
New Page 1
443
கையார் சக்கரத்து என்
கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை
சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன்
விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்!
அறையோ! இனிப் போனாலே.
பொழிப்புரை :
கையிலே
பொருந்திய சக்கரத்தையுடைய என் கருமாணிக்கமே! கண்ணபிரானே! என்று என்று மிக்க பொய்யைச்
சொல்லி, புறவிஷயங்களிலே மூழ்கி, உண்மையான பேற்றினைப் பெற்றுவிட்டேன்; உன்னுடைய திருவருள்
கிடைக்கின்ற காலத்தில் அதனைத் தடை செய்வார் யாவர்? ஐயோ! இனிப் போவாயேயானால் அறையோ!’
என்கிறார்.
விசேடக்
குறிப்பு : கைம்மை - பொய். ஆடி - விளையாடி. ‘மூழ்கி’ என்னலுமாம். ‘பெற்றொழிந்தேன்’:
ஒருசொல். வாய்க்கின்று - வாய்க்குமிடத்து. இது, வினையெச்சம்.
இத்திருவாய்மொழி,
கலிநிலைத்துறை.
ஈடு :- முதற்பாட்டு.
1என் பக்கல் உள்ளது மனத்தொடு படாத வார்த்தையாக இருக்க, இதனை மனத்தொடு பட்டு
வந்த வார்த்தையாகக்கொண்டு விரும்பி, ‘இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான பேற்றினைச்
செய்து கொடுத்தான் என்கிறார்.
கைஆர் சக்கரத்து-2வெறும்புறத்திலே
ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியைத் தரித்தானாயிற்று. 3இதுதான்
ஆபரணமுமாய் வினைத்தலையில ஆயுதமுமாய் அன்றோ இருப்பது. ஒரு கைக்குப் படையாய்
_______________________________________________
1. திருப்பாசுரத்தில்,
“பொய்யே கைம்மை சொல்லி” “மெய்யே
பெற்றொழிந்தேன்” என்பனவற்றைத் திருவுள்ளம்பற்றி
அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. “ஆர் கை சக்கரம்”
என்று கூட்டி ‘வெறும் புறத்திலே’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். ஆர் - அழகு.
3. ‘திருவாழி, மனத்தினைக் கவரக்கூடியதாக இருக்குமோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘இதுதான்’ என்று
தொடங்கி. வினைத்தலை -
போர் செய்யுமிடம். கை என்பது, சிலேடை:
|