|
ப
என்கிறபடியே, ஞானத்தில்
நிலைநின்றவர்களே அன்றோ. இனி, பலத்தை நினைத்துக் கர்மங்களைச் செய்து பலம் கிட்டினவாறே
மீளுமவர்கள் அன்றே ஹோமப்புகையும், ஹவிஸ்ஸினைக் கொள்ள வந்து நிற்கிற 1எம்பெருமானுடைய
மாளிகைச் சாந்துமாகக் கமழுகின்றன ஆதலின் ‘கமழும்’ என்கிறாள். திருவல்லவாழ் நீடு
உறைகின்ற பிரான் - அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே பிற்பாடர்க்கு உதவும்படி சிரமஹரமான
திருவல்லவாழிலே நித்தியவாசம் செய்கிற உபகாரகன். கழல் காண்டும் கொல் நிச்சலுமே-2அவன்
இங்கே நித்தியவாசம் செய்யா நின்றால், நாமும் நித்தியவாசம் செய்யும் தேசத்தில் போய்ப்
பெறக்கூடிய பேற்றினைப் பெறவல்லோமே. 3அங்கும் போனால் எப்பொழுதும் பார்த்துக்கொண்டேயிருத்தலன்றோ.
(3)
534
நிச்சலும் தோழிமீர்காள்!
எம்மைநீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள்கமுகும்
பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள்
மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின்அணைமேல்
நம்பி ரானது நன்னலமே.
பொ-ரை :- தோழிமீர்காள்! எம்மை நீங்கள் நாள்தோறும்
வருத்தி என்ன காரியத்தைச் செய்தீர்கள்? பசிய இலைகளையுடைய நீண்ட பாக்கு மரங்களும், பலா
மரங்களும், வாழைகளும், மச்சினையுடைய அழகிய மாடங்களின்மேலே புல்லிக்கொண்டிருக்கின்ற குளிர்ந்த
திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் ஆதிசேட சயனத்தின்
____________________________________________________
1. ‘எம்பெருமானுடைய மாளிகைச்
சாந்தும்’ என்றது, சொல்லுகின்ற
தலைவியின் மனோபாவத்தைக் கூறியபடி.
2. “கழல் காண்டும் கொல்
நிச்சலுமே” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘அவன் இங்கே’ என்று தொடங்கி.
3. காண்டல் மாத்திரம்
போதியதாமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அங்கும் போனால்’ என்று தொடங்கி.
அங்கும்
-பரமபதமும்.
மேல் திருப்பாசுரம்,
“மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி - என்னுடைய
தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (தோத்திர
ரத்நம். 31.)
என்றதன் பொருள். “கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா - என்
கண்களால் உன் திருவடிகளை
எப்பொழுது காணப் போகிறேன்”
(தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத்திருப்பாசுரம்.
|