|
New Page 1
மேலே எழுந்தருளியிருக்கின்ற
நம் பெருமானிடத்திலேயுள்ளதாம் எனது உயிரானது.
வி-கு :-
நன்னலம் நம்பிரானது; ஆதலால், எம்மை நீர் நலிந்து என்செய்தீர் என்க. நஞ்சு அரவு - நச்சரவு.
அரவு - பாம்பு.
ஈடு :- நான்காம்
பாட்டு. 1‘இங்ஙனம் மநோரதித்தல் ஈடு அன்று’ என்று விலக்குகிற தோழிமாரைக் குறித்து,
என்னுடைய நல்ல உயிரானது அவன் பக்கலது, உங்களுடைய வார்த்தைகள் பயன் அற்றவை என்கிறாள்.
நிச்சலும் தோழிமீர்காள்!
எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ - 2தோழிமார் ‘உனக்கு இத்தனை யாகாது காண்’
என்று பலகாலும் சொல்லுவர்களே, அது பலியாதிருக்கச் செய்தேயும், இவளை இழக்க ஒண்ணாது என்று
பார்த்து மீண்டும் சொல்லத் தொடங்கினார்கள்; 3நீங்கள் நலிதல் தவிரமாட்டீர்கோளாகில்
நான் இருந்த இடத்தே போய் நலியுங்கோள் என்கிறாள். என்னுடைய நல்ல உயிரானது அவன் பக்கலிலேயான
பின்பு நீங்கள் சொல்லுகிறவற்றால் என்ன பிரயோஜனம் உண்டு. 4எனக்கு
‘அவனைக் காண வேண்டும்’ என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப்போலே, உங்களுக்கும்
‘என்னை மீட்க வேண்டும்’ என்கிற இந்த நினைவு மாறாதே செல்லுகிறபடி. 5நீங்கள்
நீங்களாய்ச் சொல்லுகிறீர்களோ, தாய்
____________________________________________________
1. “நம்பிரானது நன்னலம்”
என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. நீச்சலும் தோழிமீர்காள்
எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ” என்பதற்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார்
‘தோழிமார்’ என்று தொடங்கி, ‘மீண்டும்
சொல்லத் தொடங்கினார்கள்’ என்பது முடிய.
3. “நம்பிரானது நன்னலம்”
என்றதனைக் கடாக்ஷித்து, “எம்மை நீர் நலிந்து
என் செய்தீரோ” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘நீங்கள்’ என்று
தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘என்னுடைய’ என்று தொடங்கி.
4. “கழல் காண்டுங்கொல்
நிச்சலும்” என்றதன்பின், “நிச்சலும் நலிந்து”
என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
‘எனக்கு’ என்று
தொடங்கி.
5. “தோழிமீர்காள்
நலிந்து என்செய்தீரோ” என்கிறவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘நீங்கள்’ என்று தொடங்கி.
“தோழிமீர்காள்” என்ற
பன்மைக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘இத்தனை பேர்’ என்று
தொடங்கி.
|