| ந 
நினைப்பாரோ. 1ஹிதம் 
சொல்லுவார் பசுமையுள்ள விடத்தேயன்றோ சொல்லுவது, இங்குப் பசலை பூத்தன்றோ கிடக்கிறது.
2பிரியாதிருப்பார்க்குப் பசுமை மாறாதேயன்றோ. 3“பச்சிலை நீள்கமுகு 
என்றாற்போலே, பலவும் தெங்கும் வாழைகளும்’ என்று உய்ந்த பிள்ளை கூட்டி அருளிச் செய்வர்காணும்” 
என்று சீயர் அருளிச்செய்வர். மச்சு அணி மாடங்கள் - 4பல நிலங்களையுடைத்தாகையாலே 
அலங்காரத்தையுடைத்தான மாடங்கள். மச்சு-மேல்தளம். மீது அணவும் - செல்வப் பிள்ளைகளுக்கு அணுக்கன் 
இட்டாற்போலே காணும் கவிந்துகொண்டு நிற்கிறபடி. தண் திருவல்லவாழ் - சிரமம் நீங்கும்படி 
சோலைசெய்த ஊர். ஆக, பசுமை மாறாத இலைகளையுடைத்தாய் நீண்ட கமுகும், அப்படிப்பட்ட பலவும், தெங்கும், 
வாழைகளும், மச்சுக்களின் நிரையையுடைத்தான மாடங்களின்மேலே, அவ்வந்நிலங்களுக்கு நிழல் செய்யும்படி 
அணவின குளிர்ந்த திருவல்லவாழிலே என்றபடி. நஞ்சு அரவின் அணை மேல் - 5மேலும் 
சுற்றும் சோலையுண்டானால் கீழும் 
_____________________________________________________ 
1. “பச்சிலை” என்றதற்கு, 
பாவம் அருளிச்செய்கிறார் ‘ஹிதம் சொல்லுவார்’என்று தொடங்கி. ஆயின், இங்குப் பசுமை இல்லையோ! 
என்ன, அதற்கு
 விடை அருளிச்செய்கிறார் ‘இங்குப் பசலை’ என்று தொடங்கி.
 
 2. அங்குப் பசுமை உண்டாவதற்குக் 
காரணம் என்? என்ன,
 ‘பிரியாதிருப்பார்க்கு’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
 பிரியாதிருப்பார்க்கு - ஈச்வரனைப் பிரியாமலிருக்கின்ற மரங்களுக்கு.
 ‘பிரியாதிருப்பார்க்கு’ 
என்றது பிரிவால் வரும் வியசனம் இன்றிக்கே
 இருப்பார்க்கு என்றபடி.
 
 3. ‘பச்சிலை நீள்கமுகு’ 
என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து என்?
 என்னில், “பச்சிலைநீள்” என்ற அடைமொழிகளை, 
பலா தெங்கு
 வாழைகளுக்கும் தனித்தனியே கூட்டிக்கொண்டு பொருள் அருளிச்செய்ய
 வேண்டும் என்று 
‘உய்ந்த பிள்ளை’ என்ற பெரியார் அருளிச்செய்வர்
 என்று நஞ்சீயர் அருளிச்செய்வர் என்பது. 
பச்சிலை நீள் பலவும்,
 பச்சிலைநீள் தெங்கும், பச்சிலைநீள் வாழைகளும் என்று கூட்டுக.
 
 4. பல நிலங்களாவன, தளத்தின்மேல் 
தளம். மச்சை அலங்காரமாகவுடைய
 மாடம். அணுக்கன்-குடை.
 
 5. 
“மீதணவும்” என்று, மேலே சோலையைச் சொன்னபோதே ‘சுற்றும்’
 என்பதும் தானே போதரும். அரவினைச் 
சோலையாகச் சொல்லுகைக்குக்
 காரணம் யாது? என்ன, குணத்தின் ஒப்புமையாலே என்று அதற்கு விடை
 அருளிச்செய்கிறார் ‘இங்கும்’ என்று தொடங்கி.
 |