|
535
535
நன்னலத் தோழிமீர்காள்!
நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர்
விண்மறைக்கும்தண் திருவல்லவாழ்
கன்னலங் கட்டிதன்னைக்
கனியைஇன் னமுதந் தன்னை
என்னலங்கொள் சுடரை
என்றுகொல் கண்கள் காண்பதுவே.
பொ-ரை :- சிறந்த அன்பினையுடைய தோழிமீர்காள்! சிறந்த
பிராமணர்களாலே செய்யப்படுகின்ற யாகங்களினின்றும் மேல் எழுகின்ற புகையானது, கரிய நிறத்தைக்கொண்டு
உயர்ந்த ஆகாசத்தை மறைக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
வெல்லக்கட்டியை பழத்தை இனிய அமுதத்தை என் நலத்தை எல்லாம் கொண்ட சுடரை என் கண்கள் காண்பது
என்று கொல்? என்கிறாள்.
வி-கு :-
வேள்விப்புகை விண்மறைக்கும் திருவல்லவாழ் என்க. கன்னல்-கரும்பு.
ஈடு :- ஐந்தாம்
பாட்டு. 1நான் செய்தபடி செய்ய, இக்கண்கள் விடாய் தீரக் காணப்பெறுவது என்று?
என்கிறாள்.
நல் நலம் தோழிமீர்காள்-நலமாவது,
2இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு. நன்னலமாவது, தங்கள் காரியம் தலைக்கட்டிக்
கொள்ளுகையன்றிக்கே இருக்கை. 3ஆனபின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று
அஞ்சி என்வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப்போமோ. 4“குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும்
சேர்க்கை எப்படி
____________________________________________________
1. “என்றுகொல் கண்கள்
காண்பதுவே” என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “நலம்” என்றதற்கு, பாவம்,
‘இவள் பக்கல்’ என்று தொடங்கும் வாக்கியம்.
“நல்” என்றதற்கு, பாவம், ‘தங்கள் காரியம்’
என்று தொடங்கும் வாக்கியம்.
3. “நன்னலம்” என்று, ஸ்வப்பிரயோஜனத்தை
விரும்பாத
சிநேகத்தையுடையவர்கள் என்கிறவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘ஆனபின்பு’
என்று தொடங்கி.
4. தோழிமார்களுக்கும்
இவளுக்கும் உண்டான சிநேகத்துக்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘குரங்குகளுக்கும்’ என்று தொடங்கி.
“வாநராணாம் நராணாம் ச
கதம் ஆஸீத் ஸமாகம:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 35
: 2.
|