முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
410

இவ

இவ்வாறு உண்டாயிற்று”- 1தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடுபடும்படியன்றோ பார்த்தது. இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ.

    நல்ல அந்தணர் வேள்விப்புகை மைந்நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் - வேறு பிரயோஜனங்களை நினைக்காதவர்களான பிராமணர்களுடைய யாகங்களில் உண்டான ஹோமப் புகையானது, வெளிறு கழித்துக் கொண்டு ஆகாயத்தளவன்றியே உயர்ந்த சுவர்க்கலோகத்தை மறைக்கும். என்றது, கருமை நிறம்கொண்டு எழுகிற புகைகள், இங்கே கண்ணழிவறப் புண்ணியங்களைச் செய்து சம்சார வெக்காயம் தட்டாதபடி சென்று தேவ மாதரோடே அநுபவிக்கிற வைமாநிகரை முகத்தோடு முகம் பார்க்க ஒட்டாமல் மறைக்கிறபடியைத் தெரிவித்தபடி. 2இருவராய்க் கலப்பாரை முகத்தோடு முகம் பார்க்க ஒட்டாமை அந்நிலத்திலுள்ளார்க்கு ஸ்வபாவம் போலே காணும் அவர்கள் புகைத்தல் இருக்கிறபடி. நல்ல அந்தணர் - வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரான பிராமணர்கள், இதனால், 3அவர்கள் கண்டீர்கோள் அத்தலைக்குத் தகுதியாகப் பரிமாறுகிறபடி; ஆன பின்பு, நீங்களும் அப்படியாயிருக்க வேண்டாவோ என்பதனைத் தெரிவித்தபடி. தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டிதன்னை - கரும்பினுடைய கோது அற்ற கட்டியை. ‘இன்னமலையின் கட்டி’ என்னுமாறு போலே, ‘திருவல்ல

_____________________________________________________

1. மூன்றாவது கருத்தை அருளிச்செய்கிறார் ‘தங்கள் அளவிலும்’ என்று
  தொடங்கி. ‘தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள்’ என்றது,
  தங்களுடைய ஐஸ்வர்யத்தைக்காட்டிலும், அதிகமான
  ஜஸ்வர்யத்தையுடையராகும்படி பார்த்தார்கள் என்றபடி. மேல் வாக்யத்தை
  விவரணம் செய்கிறார் ‘ஐச்வரியம்’ என்று தொடங்கி. ‘காடுபடும்படி’
  என்றது, நிறைவுற்றதாம்படி என்னுதல்; காட்டுக்கெல்லாம் தலைவனாகும்படி
  என்னுதல்.

2. ‘முகம் பார்க்கவொட்டாமல் மறைக்கிறபடி’ என்றதற்கு, மனோபாவம்
  அருளிச்செய்கிறார் ‘இருவராய்’ என்று தொடங்கி. ‘புகைத்தல்’ என்றது,
  சிலேடை: பொறாமை என்பதும், புகை என்பதும் பொருள்.

3. “நன்னலத் தோழிமீர்காள்” என்றதன் பின், “நல்ல அந்தணர்” என்றதற்கு,
   பாவம் அருளிச்செய்கிறார் ‘அவர்கள்’ என்று தொடங்கி.