முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
411

வாழ் கட்டி’ என்கிறாள். கனியை - அவ்வளவும் பார்த்திருக்க வேண்டாதபடி பக்குவமான பழமாயிருக்கை. இன் அமுதந்தன்னை - உடம்பைப் பூண்கட்டிக் கொடுக்க வற்றாயிருக்கை. என்றது, அநுபவிப்பதற்குத் தக்க ஆற்றலைக் கொடுக்கையைத் தெரிவித்தபடி. தேவர்களுடைய உப்புச்சாறு போலன்றிக்கே, ஆத்ம உஜ்ஜீவனம் பண்ணிக் கொடுக்கவற்றதாயிருத்தலின் ‘இன்னமுதம்’ என்கிறாள். என் நலம் கொள் சுடரை - என்னுடைய அழகையெல்லாம் கொள்ளை கொண்டு, அதனாலே ஒளியுருவனாயிருக்கிறவனை. என்றது, இவளுடைய அழகையெல்லாம் கொள்ளை கொண்டது தன்பேறு என்னுமிடம் வடிவிலே தோற்றும்படி இருக்கையைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, என்னை எழுதிக்கொண்ட அழகையுடையவனை என்றுமாம்.

    என்றுகொல் கண்கள் காண்பதுவே-‘நான்பட்டதுபட, குழந்தை ஜீவிக்கப்பெறுவது காண்’ என்பாரைப் போலே, என் கண்களின் விடாய் தீர்வது என்றோ? என்கிறார். “முடியானே” என்கிற திருவாய்மொழியிற்கூறிய கரணங்களையுடையவர் அன்றோ. இந்திரியங்களும் தாமும் தனித்தனியே சேதன சமாதியாலே விடாய்கொள்ளுகின்றவர் அன்றோ. 1“துக்கத்தால் மிக அதிகமாக இளைத்திருக்கிற என் உறுப்புக்களால் புருஷ சிரேஷ்டரான அந்தப் பெருமாளை நான் தொடக்கூடியவாறு திருவருள் புரிய வேண்டும்” என்றாள் பிராட்டி. 2குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.

(5)

____________________________________________________

 

1. கரணங்கள் விடாய்க்கக் கூடுமோ? என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
  ‘துக்கத்தால்’ என்று தொடங்கி.
 
  “யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: ஸோகா பிகர்ஸிதை:
   ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”
   என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

2. ‘கண்களின் விடாய் தீர்ந்தால் தமக்கு இலாபம்’ யாது? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘குழந்தைகள்’ என்று தொடங்கி.