முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
415

திருவடிகளைக் காண்பது எஞ்ஞான்றுகொலோ? அப்போது அலர்ந்த தாமரை போலே எல்லையற்ற போக்யமான திருவடிகள் என்பாள் ‘மலர்த்தாமரைப் பாதங்கள்’ என்கிறாள். 1அடியிலே இவர்க்குத் தானே அன்றோ ருசியை உண்டாக்கினான். 2‘அடிகள் அடிகள்’ என்று வாய்புலற்றும்படி அன்றோ திருவடிகளில் இனிமை இருப்பது.

(6)

537

    பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
    ஓத நெடுந்த டத்துள் உயர்தாமரை செங்கழுநீர்
    மாதர்கள் வாண்முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
    நாதன்இஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.

   
பொ-ரை :- பாவை போன்ற பெண்களே! தண்ணீர் நிறைந்த பெரிய குளங்களானவை, உயர்ந்த தாமரை மலர்களையும் செங்கழுநீர் மலர்களையும், பெண்களினுடைய ஒளி பொருந்திய முகத்தையும் கண்களையும் போன்று ஏந்திக்கொண்டிருக்கின்ற திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கின்ற நாதனும் இவ்வுலகங்களை எல்லாம் உண்ட நம்பிரானுமான சர்வேச்வரனுடைய மலர்களால் மேலே அலங்கரிக்கப்பட்ட திருவடிகளை நாடோறும் தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.

    வி-கு :-
மேல் பூ அணி பாதங்கள் தொழக் கூடுங்கொல் என மாற்றுக. தாமரையை முகத்துக்கும், செங்கழுநீரைக் கண்ணுக்கும் முறை நிரல் நிறையாகக்கொள்க. தடம் ஏந்தும் திருவல்லவாழ் என்க. அன்றி, தடத்துள் இருக்கின்ற தாமரையும் செங்கழுநீரும் முகத்தையும் கண்ணையும் போன்று உயர்ந்து பொலிகின்ற திருவல்லவாழ் என்னுதல்.

    ஈடு :-
ஏழாம் பாட்டு. 3அவன் திருவடிகளிலே நித்யமாகப் பூவை அணிந்து தொழ வல்லோமே! என்கிறாள்.

____________________________________________________

1. வாமனனைச் சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அடியிலே’ என்று
  தொடங்கி. தமக்குத் திருவடிகளிலே ருசி பிறந்தது வாமனன் திருவருளாலே
  என்பது கருத்து.

2. பல பாசுரங்களிலும் திருவடிகளைச் சொல்லுவதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘அடிகள்’ என்று தொடங்கி.

3. “நாடோறும் பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடுங்கொல்” என்றதனைக்
   கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.