| ப 
    பாதங்கள்மேல் பூ அணி தொழக் கூடுங்கொல்-திருவடிகளின்மேலே 
மலர்களை அணிந்து நமக்குத் தொழக் கூடவற்றோ. பாவை நல்லீர் - 1இவளை விலக்குவதற்கு 
ஆற்றல் இல்லாதவர்களாய் மரப்பாவைகளைப் போன்று இருந்தபடி. அன்றிக்கே, எழுதின பாவை போன்று 
இருந்தார்கள் என்னுதல். அன்றிக்கே, விலக்காமையாலே மகிழ்ந்து பெண்களில் நல்லரானவர்களே! 
என்று விளிக்கிறாள் என்னுதல். ஓதம் நெடுந்தடுத்துள் உயர்தாமரை செங்கழுநீர் - கடல் போலே 
பெருத்திருந்துள்ள தடாகங்களினுள்ளே ஓக்கத்தையுடைத்தான தாமரை செங்கழுநீரானவை. மாதர்கள் வாண்முகமும் 
கண்ணும் ஏந்தும்-அவ்வூரில் பெண்களினுடைய ஒளியையுடைத்தான முகத்தையும் கண்களையும் 2தரியா 
நின்றன. என்றது, ஊருக்கும் வயலுக்கும் வாசி தெரிந்து கோடல் அரிதாயிருக்கையைத் தெரிவித்தபடி. 
அன்றிக்கே, 3திருவோலக்கத்திற்படியே அவற்றைத் தள்ளும்படியாயிருக்கை என்னுதல். 
திருவல்லவாழ் நாதன் - ஸ்ரீவைகுண்ட நாதனைக்காட்டிலும் ஏற்றம். என்றது, 4ஸ்ரீ வைகுண்டத்துக்குக் 
கடவனாய் இருக்கிறது, அந்தப்புரத்துக்குக் கடவன் என்கிற அளவே அன்றோ, ஒண்டொடியாள் திருமகளும் 
நீயுமே நிலாநிற்ப இருக்கிற இடமே அன்றோ; இது அங்ஙன் அன்றிக்கே, ஒருவர் கூறையை எழுவர் உடுக்கிற 
தேசத்திலே தரிசு அற இருக்கிற இடமே அன்றோ 
____________________________________________________ 
1. “பாவை” என்பதற்கு, மரப்பாவை என்றும், 
கொல்லிப்பாவை என்றும்,
 பிரதிமை என்றும் மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்
 ‘இவளை 
விலக்குவதற்கு’ என்று தொடங்கி. முதற்பொருள், விலக்குதற்கு
 ஆற்றல் இல்லாமையைக் குறித்தது. 
இரண்டாவது பொருள், அழகிய
 உறுப்புகளையுடையவர்கள் என்பதனைக் குறித்தது. மூன்றாவது பொருள்,
 ஸ்வாதந்திரியம் இல்லாதவர்கள் என்பதனைக் குறித்தது.
 
 2. ‘தரியாநின்றன’ என்றது. ஒப்புமையைத் தரித்துக்கொண்டு 
நிற்கின்றன
 என்றபடி.
 
 3. இரண்டாவது பொருளில் “ஏந்துதல்” என்பதற்கு, தள்ளுதல் 
என்பது
 பொருள். திருவோலக்கத்திற்படியாவது, பெரியோர்கள் ஓலக்கத்திலே
 தாழ்ந்தவர்கள் வந்தால் 
முறைப்படி தள்ளிவிடுதல்.
 
 4. ஏற்றம் 
யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ
 வைகுண்டத்துக்கு’ என்று தொடங்கி. தரிசு-பாழ்கிடக்கிற 
நிலம்
 “ஒண்டொடியாள்” என்றது, திருவாய். 4. 9 : 10.
 |