முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
417

என

என்றபடி. இஞ்ஞாலம் உண்ட-ஆபத்தே செப்பேடாக வயிற்றிலே வைத்து நோக்கும். என்றது, மேன்மை பாராதே 1தளர்ந்தார் தாவளமாயிருக்கும் என்றபடி. அது கதையில் கேட்க வேண்டி இருந்ததோ? எனின், நம்பிரான் தன்னை - சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்து இவ்வளவாக்கி உபகரித்தவன். நாடொறும் பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடுங்கொல்?

(7)

538

    நாடொறும் வீடின்றி யேதொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
    ஆடுறு தீங்கரும் பும்விளை செந்நெலு மாகிஎங்கும்
    மாடுறு பூந்தடஞ் சேர்வயல் சூழ்தண் திருவல்லவாழ்
    நீடுறை கின்ற பிரான்நிலம் தாவிய நீள்கழலே.

    பொ-ரை :- நல்ல நெற்றியையுடைய பெண்களே! எல்லாவிடங்களிலும் அரைக்கப்படுகின்ற மதுரம் பொருந்திய கரும்புகளும் வளைந்திருக்கின்ற செந்நெற்பயிர்களுமாக, பக்கங்களில் பொருந்தியிருக்கின்ற அழகிய குளங்களையும் அவற்றைச் சார்ந்து சூழ்ந்திருக்கின்ற வயல்களையுமுடைத்தாயிருக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்தில் நித்தியமாக எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய நிலம்  தாவிய நீண்ட திருவடிகளை, நாள்தோறும் இடையீடு இல்லாமல் தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.

    வி-கு :-
எங்கும் கரும்பும் செந்நெலும் ஆக தடம் சேர்ந்து வயல் சூழ்ந்த திருவல்லவாழ் என்க. பிரானுடைய நீள்கழலைத் தொழக்கூடுங்கொல்? என்க. மாடு-பக்கம்.

    ஈடு :-
எட்டாம் பாட்டு. 2சர்வ சுலபனானவன் திருவடிகளிலே சர்வ காலமும் இடைவிடாதே அடிமை செய்யக் கூடவற்றே! என்கிறாள்.

    நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்-‘நாடொறும்’ என்று, ஒவ்வொரு பக்ஷத்திலும் செய்யும் யாகங்களைப் பிரிக்கிறது. ‘வீடு இன்றியே’ என்று

___________________________________________________

1. தளர்ந்தார் தாவளம்-தளர்ந்தவர்கட்கு ஆதாரமாயிருப்பவன்.

2. “நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழல் நாடொறும் வீடின்றியே
   தொழக் கூடுங்கொல்” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
   அருளிச்செய்கிறார்.