முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
418

நித்திய அக்நிஹோத்ரத்தைப் பிரிக்கிறது. 1“ஒழிவில் காலமெல்லாம்” என்கிறபடியேயன்றோ இவர் பிரார்த்திப்பது. 2ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப்போல் அன்றியே, அடிமை ரசித்து ஆசையாலே விரும்புகிறாரே அன்றோ. நல்லுதலீர் - 3அவன் வந்த உபகாரத்துக்கு அவன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய வணக்கத்தினால் புழுதி படிந்த நெற்றியுடையவர்களாக உங்களைக் காண வல்லேனோ. 4“தலையில் வணங்கவுமாங்கொலோ” என்று தொழக்கடவளே, அப்போது இவர்களும் தொழுவர்களே; இவளுக்குக் கைங்கர்யத்தில் உகப்புப்போலே, இவள் பேறே தங்களுக்கு உகப்பாயிருக்குமவர்களே. ஆடுஉறு தீங்கரும்பும் விளைசெந்நெலுமாகி எங்கும்-கரும்புகள் எப்போதும் ஆடுகையிலே உற்றிருக்கை, செந்நெலும் எப்போதும் அறுக்கைக்குப் பக்குவமாய் விளைந்து கிடக்கை. என்றது, 5அங்குள்ளவை முழுதும் பக்குவமாய்க் காணும் இருப்பது என்றபடி. மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் - மருங்கேயுற்றிருப்பதாய்ப் பூக்களையுடைத்தான தடாகங்களைச் சேர்ந்த வயல்களாலே சூழப்பட்டிருப்பதாய்ச் சிரமஹரமான திருவல்லவாழிலே. 6ஊரைத் தடாகங்கள் சூழ்ந்து,

___________________________________________________

1. ஒருகால் தொழுதால் போராதோ, “நாடொறும் வீடின்றி” என்கிறது என்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒழிவில்’ என்று தொடங்கி.
  இது, திருவாய். 3. 3 : 1.

2. நமக்கு அப்படி அபேக்ஷை பிறக்க இல்லையே? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘ஆசாரிய’ என்று தொடங்கி.

3. தன் நிலையைக் கண்டு உறாவியிருக்கிறவர்களை “நன்னுதலீர்” என்கிறது
  என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவன் வந்த’ என்று
  தொடங்கி.

4. தோழிமார்கள் வணங்குவார்களோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தலையில்’ என்று தொடங்கி. இது, திருவாய். 5. 3 : 7.

5. ‘அங்குள்ளவை முழுதும் பக்குவமாய்க் காணும் இருப்பது’ என்ற
  வாக்கியத்தால், நாம் அங்குச் சேர்தலே தாமதம், அவன் நம்மை
  அநுபவிப்பான் என்ற பொருள் கூறப்படுகின்றது.

6. சிரமஹரமாய் இருப்பதற்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘ஊரைத் தடாகங்கள்’ என்று தொடங்கி.