|
தட
தடாகங்களை வயல்கள் சூழ்ந்திருக்க, இப்படிகளாலே
குளிர்ந்துகாணும் ஊர்தான் இருப்பது. நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே - 1குணாகுண
நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகள் மேலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளைக் கொண்டு, அவதாரம்
போலே தீர்த்தம் பிரசாதியாமல் நித்தியவாசம் செய்கிற உபகாரமே இங்குத்தைக்குத் தன்னேற்றம்.
நிலம் தாவிய நீள்கழல் நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்? என்க.
(8)
539
கழல்வளை பூரிப்ப நாம்கண்டு கைதொழக் கூடுங்
கொலோ?
குழல்என யாழும் என்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டு கள்இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலிசக் கரப்பெரு மானது தொல்லருளே.
பொ-ரை :-
இளமை பொருந்திய அழகிய வண்டுகளானவை, குளிர்ந்த சோலையிலே தேனைக் குடித்துக்
குழலைப் போலவும் யாழைப் போலவும் இசையைப் பாடுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளியிருக்கின்ற சுழலின் மலி ‘சக்கரப் பெருமானுடைய தொல்’ அருளால், சுழலுகின்ற வளையல்கள்
தங்கும்படியாக நாம் கண்டு தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
வி-கு :- வண்டுகள் தேன் அருந்தி குழல்
என்ன யாழும் என்ன இசை பாடும் திருவல்லவாழ் என்க. தொல் அருளால் கண்டு தொழக்கூடுங்கொல்?
என்க. குழல், யாழ் என்பன: ஆகுபெயர். மழலை-இளமை. வரி-கீற்றுமாம். சுழலின் மலி-சுழலுதலில்
மிகுந்த. இது, சக்கரத்திற்கு அடை.
ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 2நம்முடைய
கழலுகிற வளைகள் பூரிக்க அவனைக் கண்டு தொழும்படி அவன் அருள் கூடவற்றே! என்கிறாள்.
___________________________________________________
1. ‘குணாகுண நிரூபணம் பண்ணாதே’ என்று தொடங்கும்
வாக்கியத்திற்குக்
கருத்து, சௌலப்யம். ஸ்ரீ வாமனனுக்கும் இவனுக்கும் ஒக்கும்,
நீடுறைகின்றதே
இவனுக்குத் தன்னேற்றம் என்பது. இங்குத்தை - இவ்விடம்.
2. “கழல்வளை பூரிப்ப நாம் கண்டு கைதொழப் பெருமானது தொல்லருள்
கூடுங்கொலோ” என்பதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|