முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
420

கழல

கழல்வளை பூரிப்ப 1“வெள்வளை” என்னுமாறு போலே. ‘கழல்வளை’ என்று, வளைக்கு விசேடணமாய் விட்டது காணும். 2இவளைக் கைவிடுகையாலே அன்றோ இது விசேடணமாக வேண்டிற்று. பூரிப்ப - பூர்ணமாக. 3அவன் வரில் கைமேலே காணலாமே இவற்றை. ‘பூரிப்ப’ என்பதனை, மேலே வருகின்ற ‘நாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ’ என்றதனோடு முடிக்க. பிரிவில் வளை கழலுவது தனக்கேயானாலும் காட்சி எல்லார்க்கும் ஒக்குமாதலின் 4‘நாம்’ என்கிறாள். குழல் என்ன யாழும் என்ன குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை. 5நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டாற்போலே இருக்கை. 6“வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்னுமாறு போலே. குளிர் சோலையுள் தேன் அருந்தி - சிரமஹரமான சோலையிலே குளிருக்குப் பரிஹாரமாகத் தேனைக் குடித்து. அருந்தி - குடித்து. மழலை வரி வண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ் - இளமையோடு கூடியதாய்க் காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள், பிரீதிக்குப் போக்குவிட்டுப் பாடாநின்றுள்ள திருவல்லவாழ். செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறு

_____________________________________________________

1. “வெள்வளை” இது திருவாய். 10. 3 : 7.

2. விசேடணமாகைக்குக் காரணம் என்? என்ன, ‘இவளை’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘இவளைக் கைவிடுகையாலே’ என்பது,
  இவளை அவன் கைவிடுகையாலே என்றும், இந்த வளை கையை
  விடுகையாலே என்றும் இரு பொருள்படும்.

3. வளை பூரிக்கைக்கு ஹேது யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அவன் வரில்’ என்று தொடங்கி.

4. “யாம்” என்பது முன்புள்ள பாடம்.

5. “குழல் என்ன யாழும் என்ன” என்றதனால் போதரும் பொருளை
   அருளிச்செய்கிறார் ‘நாட்டில்’ என்று தொடங்கி.

6. ஒன்றற்குப் பல பொருள்களை உவமை கூறுதற்கு மேற்கோள் காட்டுகிறார்
  ‘வீதியத்தில்’ என்று தொடங்கி.

  “விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”
  
என்பது, ஸ்ரீ ராமா. பால. 1 : 18.